Search This Blog

Thursday 12 October 2023

முதற்கனல் – பெருநாவலின் முதற்பொறி

 

 அஸ்தினபுரியின் மீது நெருப்பு பொறி வந்து விழுகிறது. ஏன்… எதனால்.. காதலினாலா? காமத்தினாலா? துரோகமா? சினமா? அல்லது மண்ணாசையா? எதன் பொருட்டு கனல் அஸ்தினபுரியை அவியாக்கிக் கொள்ள எண்ணுகிறது? ஒரு அநீதியான அரசியல் செயல்பாடுதான் இதன் தொடக்கம். அது தனிமனிதரொருவரின் கடமையுணர்விலிருந்து உருவானதா? தந்தையின் மீதான அவரின் பெருவிருப்பத்தாலா? அவ்விருப்பமே தந்தை இறந்து விட்ட போதிலும் அவரது ஆசை மனைவியான  சின்னம்மையின் வாக்கை வேதமென்று கருத வைத்ததா? எதிர்காலத்தை கணிக்கும் ஆற்றல் அந்த பேரரசியிடம் உள்ளதென்று நம்பும் மனத்தை கொள்ள வைத்ததா? அல்லது தன் தந்தையின் நாடு தக்க வாரிசின்றி பிறிதொருவருக்கு உடமையாகி விட கூடாது என்ற தன்னுணர்வா? எந்த எண்ணம் அவரை வெற்றிக் கொண்டிருந்தாலும் அவர் மேற்கொண்ட நியாயமற்ற செயல்தான் இதன் முதற்சுழி. 

தந்தையின் காமத்துக்காக தன் அரச நிலையையும் காமத்தையும் துறந்த பீஷ்மர் என்னும் பெருமனிதர் ஷத்திரிய நியாயத்தை கையிலேந்தி அதில்  காசி நாட்டின் மூன்று இளவரசிகளை பலவந்தமாக அமர வைத்து நோயாளியான தங்கள் நாட்டு இளவரசனுக்கு மணமுடிப்பதற்காக சிறைப்பிடித்துக் கொண்டு வருகிறார். அஸ்தினபுரியின் ஸ்திரத்தன்மைக்காக அவரது சிற்றன்னையான சத்யவதியின் பின்களமாடலுக்கு செயல்வடிவம் கொடுக்க ஷத்திரிய தர்மம் அவரை அனுமதித்ததை போல அந்த அநீதியினுள் தொலைந்துப் போன மானுட தர்மம் அல்லது அறப்பிழல் அவரை அனுமதிக்கவில்லை. அது எரிதழலென அஸ்தினபுரியின் மீது விழுகிறது. அதன் கதையைதான் முதற்கனல் பேசுகிறது. இதுவே பக்க எண்ணிக்கைகளாலும் கிளைக்கதைகளாலும் மூலக்கதையமைப்பாலும் பகவத்கீதை என்ற நெறிநுாலாலும் கட்டமைக்கப்படவிருக்கும் வெண்மையான முரசின் முதலாவதான நாவல். 

விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களின் சிறுகதைகள் குறித்த கட்டுரை

இளம் வயதிலிருந்தே கதை கேட்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு எனக்கு. அந்த ஆர்வம்தான் கதை சொல்லும் ஆசையாக உருமாறி இருக்கிறதோ என்னவோ -  கவிஞர் யுவன் தன் சிறுகதைத்தொகுப்பொன்றின் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுவதை குறித்து வைத்துக் கொள்வோம்.




பொதுவாக மேலுள்ளம் புறவாழ்க்கையோடு எப்போதும் தொடர்பிலிருந்துக் கொண்டேயிருக்கும். கூடவே ஆழுள்ளம் அதுவாகவே இயங்கி கொண்டிருக்கும். இவ்விரண்டுக்குமான தொடர்புகளின் விகிதாச்சாரங்களே மனிதனின் குணாதிசயத்தை முடிவு செய்கிறது. ஆழுள்ளத்தின் சன்னமான குரல்களை அழுத்தமானதான ஆக்கும் வகைப்பாட்டுள் ஒன்றுதான் எழுதிப்பார்ப்பது. ஆகவேதான் எழுத்து எதை சொல்ல வேண்டும், எப்படி பிரதிபலிக்க வேண்டும் என்று வரையறைப்படுத்தப்படும்போது அதற்குள் எழுத்தாளரால் இயங்க முடிவதில்லை. வரையறைக்குட்படும்போது அது ஆற்றொழுக்கானதாக இருந்து விடவும் முடியாது. ஒரு கருவை எழுத்தாக்கும்போது ஆழுள்ளம் மேலெழும்புகிறது. சொல்லப்போனால் கதைக்கான கருக்களை ஆழுள்ளமே முடிவு செய்கிறது. புறநிகழ்வுகள் நினைவுகளாக படியும்போது, ஆழுள்ளம் நமக்கு விருப்பமானவற்றை ஒருபுறமாக அடுக்கி வைத்துக் கொள்கிறது. நிறைவேறாத இவ்விருப்பங்கள் சிலசமயம் உக்கிரமாகவும் வெளிப்படுவதுண்டு. போலவே மறுவினையற்றும் முடிந்து விடுவதுமுண்டு. அதேசமயம் அடக்கவியலாத ஆதங்கம் கனவுகளாக வெளிப்படவும் வாய்ப்புண்டு. ஆனால், கிருஷ்ணன் அவர்களுக்கு சட்.. யுவன் அவர்களுக்கு எழுத்தாக வெளிப்படுவதோடு நிறைவுக் கொள்ளாமல், கனவாகவும் அது தொடர்கிறது. அதையும் அவர் கதையாக்குகிறார்.