Search This Blog

Thursday 30 November 2017

மலைக்கோட்டை மாவட்ட இலக்கியம்

கணையாழி டிசம்பர் 2017 இதழில்..

மனிதனில் உள்ளுணர்வாக பதியப்பட்டிருக்கும் அடிப்படை இச்சைகள் அவனை வாழ்தலை நோக்கி உந்துகின்றன. இணைந்தே, நாகரிகமும் உருவாகிறது. அறத்திற்கான விழுமியங்கள் நாகரிக வாழ்வை கட்டமைக்கிறது. இவ்விழுமியங்களை உருவாக்குவது இலக்கியம் எனலாம்.. இச்சைகளுக்கும் அறத்துக்குமான போராட்டத்தை வாழ்க்கை எனலாம். அதேசமயம் விழுமியங்கள் பண்பாட்டு சிக்கலுக்குள் அடைப்பட்டு போகும்போது இலக்கியம் அதன் கட்டற்ற தன்மைக்குள் ஒழுங்கமையாது போய் விடும் அபாயமும் உண்டு.

உலகெங்கிலும் நிகழ்ந்த ஐரோப்பிய காலனியாதிக்கத்தின் விளைவாக உலக இலக்கியங்கள் பெரும்பான்மை ஆங்கிலம் ஃப்ரெஞ்ச் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது. அதன் வழியாகவே இலக்கியம் உலகமயப்படுத்தப்பட்டது எனலாம். மண் சார்ந்து.. பண்பாடு சார்ந்து.. மதம் சார்ந்து.. இனம் சார்ந்து.. உருவாகி வளரும் உள்நாட்டு இலக்கியம் தனக்கான நிலைத்தன்மையோடு, உலக இலக்கியம் சார்ந்து தன்னை தகவமைத்துக் கொள்ளும் இளகுத்தன்மையையும் ஒருசேர பெற்று விடும்போது உலகளாவிய இலக்கியம்  உருவாகி விடுகிறது. கூடவே, தனக்கான குறியீட்டு மொழியையும் உருவாக்கி கொள்கிறது. உள்நாட்டு இலக்கியத்திற்கு இந்த ஆற்றொழுக்கில் அடித்துச் செல்லவியலாத படைப்புகளை தர வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. கட்டற்ற இலக்கிய எழுச்சி அங்கிருந்து தோன்ற தொடங்குகிறது எனலாம். கற்பனையின் எல்லையில்லாத வெளியில்.. காவியப் படைப்புகள் முன்னெழும்பி வருகின்றன.

இலக்கியம் மொழி.. எல்லைகளை கடந்து விட்டபோதிலும், பகுதிரீதியாக அவற்றை அணுகும்போது விடுப்பட்ட படைப்புகளும், சந்தர்ப்பவசத்தால் வெளிச்சப்படாத படைப்பாளிகளும் உணரப்பட வாய்ப்புண்டாகிறது. இம்மாதிரியான அணுகுமுறைகளை கணையாழி போன்ற முன்னணி இலக்கிய இதழ்கள் முன்னெடுப்பது என்பது ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிக்கு உதவுகின்றன.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை பொறுத்தவரை படைப்பாளிகளும், அறிஞர்களும், புலவர்களும்.. அவர்களுக்கு உறுதுணையாக புரவலர்களும், இலக்கிய அமைப்புகளும், தமிழ்ச் சங்கங்களும் சங்ககாலம் முதற்கொண்டு நிகழ்காலம் வரையிலும் துடிப்பாக இயங்கி வருகின்றன. கூடவே, பட்டிமன்ற பேச்சாளுமைகளும் வானொலி எழுத்தாளர்களும் இலக்கிய வளர்ச்சிக்கு பேருதவி புரிந்து வருகின்றனர்.

சங்கக்கால புலவர்கள்

உறையூர் மருத்துவன் தாமோதரனார், உறையூர் முதுகண்ணன் சாத்தனார், உறையூர் இளம் பொன்வணிகனார், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், உறையூர் கதுவாய் சாத்தனார், உறையூர் சல்லியம் குமரனார், உறையூர் சிறுகந்தனார், உறையூர் பழகாயனார், துறையூர் ஓடைக்கிழார், அரிசில் கிழார் போன்ற சங்கக்கால புலவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்தவர்களே.

இருபதாம் நுாற்றாண்டு முன்பான காலக்கட்டத்தில் இலக்கியப் பணி

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. 19-ம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றிய பெருமைக்குரியவர். புராணங்கள், காப்பியங்கள், பிள்ளைத் தமிழ் நூல்கள், அந்தாதி, கலம்பகங்கள், கோவைகள் தவிர எண்ணற்ற தனிப் புராணங்களையும் இவர் இயற்றியுள்ளார். பெரியபுராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர். .வே. சாமிநாதையரின் ஆசிரியர். ‘திரிசிபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’ என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாற்றை .வே.சாமிநாதய்யர் விரிவாக இரு பாகங்களாக எழுதி வெளியிட்டார். மாயூரம் வேதநாயகம் பிள்ளை மீது வைத்திருந்த பெருமதிப்பின் காரணமாக, அவரைப் பாராட்டிகுளத்துக்கோவைஎன்னும் நூலை இயற்றினார்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழின் முதல் புதினமாக அறியப்படும் பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நுாலை எழுதியவர் இவரே. கி.பி.1805 முதல் 1861 வரையிலான காலக்கட்டத்தில் ஆங்கில மொழியிலிருந்த சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை தமிழில் மொழிப்பெயர்த்து “சித்தாந்த சங்கிரகம்“ என்ற நுாலாக வெளியிட்டார். பெண்மதிமாலை, திருவருள் அந்தாதி, திருவருள் மாலை, தேவமாதர் அந்தாதி போன்ற கிறித்துவ மத நுால்களும், சர்வசமய சமரசக் கீர்த்தனை என்ற இசைப்பாடல்கள் அடங்கிய நுாலையும் சுகுணசுந்தரி என்ற புதினத்தையும் எழுதியுள்ளார். சத்தியவேத கீர்த்தனை, பொம்மைக் கல்யாணம், பெரியநாயகியம்மன் போன்ற நுால்களும் எண்ணற்ற தனிப்பாடல்களும் இயற்றியுள்ளார்.

கருவூர் தேவர், பெரியவாச்சான்பிள்ளை, திருப்பாணாழ்வார் அழகிய மணவாள ஜீயர், தத்துவ தீப முதலியார், திருவரங்கம் வடக்கு திருவீதிப்பிள்ளை தாயுமானவர் போன்ற சமய இலக்கிய புலவர்களும் மௌனமட வேலாயுதத் தம்பிரான், புலவர் அப்பாவு, அப்பியாச்சியார், துறையூர் அமிர்தலிங்கத் தம்பிரான், உறையூர் அருணாச்சல ஆச்சாரியார், உடையார்பாளையம் அருணாசலக் கவிராயர், அழகிய சிற்றம்பல கவிராயர், முத்து வீரப்ப உபாத்தியார். பூவாளுர் தியாகராசச்செட்டியார் போன்ற புலவர்களும் இக்காலக்கட்டத்தை சார்ந்த பெரும் இலக்கிய ஆளுமைகளே.

இருபதாம் நுாற்றாண்டில் 

தமிழிலக்கியம் செழிக்கத் தொடங்கியதற்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த படைப்பாளிகளின் பங்கு கணிசமானது. இந்நுாற்றாண்டின் துவக்கத்தில் சித்தர் மரபை பின்பற்றி திரிசிரபுரம் இராமசாமி நாயுடு “கேள்விப்பதிகம்“ என்ற நுாலையும், திருவானைக்கா புலவர் சோமசுந்தரம்பிள்ளை, ஸ்ரீரங்கம் சுந்தரராச ஐயங்கார், சீனிவாசதேசிகர், ஸ்ரீரங்கம் வேங்கடாச்சாரியார், டேவிட்பிள்ளை ஆகியோர் முறையே யாக மாளிகை, ஞானசித்தர் நாமப்பதிகம், அடைக்கலப்பத்து, ஞான சித்த வசனாமிர்தம், சித்தர் அனுபூதி போன்ற நுால்களையும் இயற்றியுள்ளனர்.

திருநெல்வேலியில் பிறந்து திருச்சிராப்பள்ளியில் வசித்த ஞானச்சித்தர் திருச்சிராப்பள்ளி பதிகம், திருவானைக்கா பதிகம், அகிலாண்டேசுவரி மாலை, திருவரங்கத் திருமாலை, கடம்பர் கோயிற்பதிகம் போன்ற நுால்களை இயற்றினார்.

தொடர்ந்து,

அறிவானந்த அடிகள்                 –      திருக்கல்லங்குறிஞ்சி
ஞானச்சித்தர்                         -      திருச்சிராப்பள்ளி பதிகம்,
                                          திருவானைக்கா பதிகம்,
                                          அகிலாண்டேசுவரி பாமாலை,
            திருவரங்கத் திருமாலை,
            கடம்பர் கோயிற் பதிகம்.
திரிசிரபுலம் வீ. கோவிந்தம்பிள்ளை   –    இராஜமன்னார்கோவில்தலபுராணம், அலங்கார கோவை
இராமலிங்கம்பிள்ளை                  –     மதுரை அங்கையர்,
கண்ணம்மை அமரலங்காரம்       
வரகவி வே.செ.சொக்கலிங்கனார்       –      தேனுார் புராணம்,
                                          முருகூர் சிவதோத்திரத் திரட்டு,
                                          சமயக்குரவர் நால்வர் அந்தாதி
எம்.ஆர்.ஜம்புநாதன்                   -      வேத சந்திரிகை
சோ.வீரபத்திரபிள்ளை                 -      திரிசிரபுரம் பதிற்றுப்பத்து
திரிசிரபுரம் பண்டிதம் அமிர்தம்பிள்ளை -      யாப்பிலக்கண வினாவிடை,
                                          பெண்மை நெறி விளக்கம்
அமிர்தம் சுந்தரநாதம் பிள்ளை         -      திரிசிரமலைக்கோலை,
                                          வயலுார் புராணம்,  வயலுார் வெண்பா
                                          புலவர் ஆற்றுப்படை
சித்திரகவி ஐசயது இமாம் புலவர்      -     
பிச்சை இப்ராஹீம்                   -      ஆதமலை திருப்புகழ்,
                                          நாகூர்பிள்ளைத்தமிழ், சீதக்காதி பதிகம்,
                                          திருமதீனத்து வெண்பா,
                                          நத்ஹர்வலிஆண்டவர்கள்பிள்ளைத்தமிழ்
                                          மொஹ்தீன் ஆண்டவர் மாஐல
வித்துவான் துரைசாமி                -      சோபனபுரம், முதற்காதல்,
                                          அமுதகலசம், சம்பந்தர் வெண்பா
இராமசாமி உடையார்                 -     ஸ்ரீகுளுந்தாளம்மன் பதிகம்
முத்துரத்தின பாரதி                   -      காந்தீயம், மனிதமறை,
                                          தமிழ் விளையாட்டு,
                                          15000க்கும் மேற்பட்ட கவிதைகள்
பெ.இராமலிங்கனார்                   -     கரூரே வஞ்சி, பரணர் காட்டிய தமிழ்
                                          அண்ணாவின் பிள்ளைத்தமிழ்
திருப்பதி சுவாமிகள்                  -     பழமொழி போதகம், யுக்தி சாதரம்,
                                          வித்யா கீதை
அரங்கநாயகி அம்மாள்                -    ஸ்ரீரங்கநாதர் பள்ளியறைக் கீர்த்தனை
                                          ஸ்ரீரங்கம் வழிநடைக்கும்மி,
                                          துளசி மகாதமிய கீர்த்தனை
அம்புஜத்தம்மாள்                     -     துலாபார நாடகக்கும்மி
                                          ஸ்ரீரங்க நாச்சியார் வஸந்தஉற்சவகும்மி
                                          சீதா கல்யாண கீர்த்தனை
தண்.கி.வெங்கடாஜலம்                -     தியாகையர், பாட்டுக்கொரு புலவன்
(பெங்களுர் தமிழ்ச்சங்கத்தை தோற்றுவித்தவர்)
மஹி (டி.ஆர்.குருஸ்வாமி)             -     நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள்
                                          இவரது கவிதைகள் 14 மொழிகளில்   
                                          மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன.
புலவர் தி.இரா.தருமராசனார்           -    ஞாபகச்சின்னம், தலைநிமிர் தமிழா
                                          திருக்குறளும் தமிழரும்
புலவர் அரங்க.சீனிவாசன்              -    காந்திமகான் காதை
அ.கண்ணப்பர்                        -     காதல்மணிகள்,சித்தவைத்திய கட்டுரைகள்
புலவர் சி.அரசப்பனார்                 -    தமிழ் விருந்து, கலையமுதம்,
                                          என்னைக் கவர்ந்த சென்னை,
                                          கல்விக் காவலர், நடிகர்திலகம்சிவாஜி
                                          பேரறிஞர் அண்ணா
இலால்குடி ப.அரங்கசாமி              -    புறநானுாறும் புலவர்வாழ்வும்
                                          பத்துப்பாட்டில் பைந்தமிழ் வளம்,
                                          அண்ணாமலையார் ஆற்றுப்படை,
                                          கனகசபை பிள்ளைத் தமிழ்
ஆசுகவி இராசவேலு செண்பகவள்ளி   -    திருமழப்பாடி திருஇரட்டைமணிமாலை
                                          திருமேனி வெண்பா அந்தாதி,
                                          வெண்பா விருந்து, கபிலர்பாரி,
                                          செண்பகவள்ளிதுாது, பிள்ளைத்தமிழ்
திருச்சி “பா“ரதன்                     -    குழந்தைப்பாடல்கள், கவிதை, கட்டுரை
                                          நாடகம், சிறுகதை என 65க்கு மேற்பட்ட
                                          நுால்கள்
புலவர் திருநாவுக்கரசு                 -   காமராசர் பிள்ளைத்தமிழ், குழந்தைகள்
                                          பாடல்கள், இலக்கணவினாவிடை,
                                          அன்னம் விடுதுாது
புலவர் தியாகசாந்தன்                 -   உலா வந்த நிலவுகள் – கவிதை நுால்
கவிஞர் நா.நடராசன்                  -   தமிழ் இலக்கியம், இந்தியநாடு,
                                         காந்தியடிகள், தமிழ்க்கவிதை மலர்
கவிஞர் மணி                        -   சிறுவர் வாழ்வு, தமிழ்த்தாய் அகவல்,
                                          திருக்குறள் வில்லுப்பாட்டு,
                                          தீண்டாமை ஒழிப்பு.
கடவூர் மணிமாறன்                    சிவப்பு மலர்கள், புரட்சிப்பாவலர்கள்,                                                     பாரதிதாசன்-பெருஞ்சித்திரனார் ஓர் ஆய்வு
கவிஞர் சொல்லேருழவர்              -     கல்லக்குடிகொண்டான் காவியம்
                                          அறிவியக்கம்
கவிஞர் அருணா பொன்னுசாமி        -     பெண்மை, அகலிகை ஒரு ஆய்வு
பாவலர் அருள் செல்லத்துரை         -      ஏசுபிரான் பிள்ளைத்தமிழ், மனைமாட்சி
                                          வண்ணம்
புலவர் சிவலிங்கம்                   -     முதன்முதலாக தமிழில் தந்தியைக்
                                          கண்டுப்பிடித்த அறிஞர்.
                                          தமிழ்த்தந்தி, உலகக்கவிதைகள்
கப்பல்கவிஞர் கி.கிருஷ்ணமூர்த்தி -       இனிவரும் இன்பம், இமைகள் சுமைகளல்ல
உணர்ச்சிக்கவி சிங்காரவேலன்        -      கச்சத்தீவை மீட்போம்,
சிங்காரவேலன் கவிதைகள்
பாவலர் பரணர்                      -      பாவாணர் நுாறு
ஹஜ்ரத் சுஹ்ரவர்த்தி                 -      திருக்குறளை உருது மொழியில்
                                          மொழிப்பெயர்த்தமைக்காக சாகித்யஅகாடமி
                                          விருது பெற்றார்.

மேற்கண்ட முக்கியமான இலக்கியப் படைப்புகள் வழியாக தமிழும் இலக்கியமும் ஒருங்கே வளர்ந்தன.

கவிஞர் வாலி  

அவர்களும் இந்த காலக்கட்டத்தைச் சேர்ந்தவரே. சிறந்த தமிழ்க் கவியும், தமிழ்த் திரைப்படத்துறையில் பாடலாசிரியராகவும் திகழ்ந்தார். சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். .இவர் எழுதிய பாண்டவர் பூமிகிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் ஆனந்த விகடன்  இதழில் எழுதிய‌ 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் இவரின் பெயர் பெற்ற படைப்புகளாக முன்னிற்கின்றன. திரைப்படங்களுக்கென 15,000 மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். மேலும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

மேலும் கவிஞர் பாரதிநேசன், கோபண்ணன், அயிலை தமிழ்ச்செழியன், மணல்மேடு குருநாதன், கவிஞர் கார்வண்ணன், புலவர் சிவக்கொழுந்து, அரிமா குறள்மொழி, சுரபி ராமச்சந்திரன், பறம்பை பிரகாசம், நாவை சிவம், மணவை இராமையா, ஆசுகவி வீரமணி, குரு கல்யாணசுந்தரம், புலவர் நடராசன், கவிஞர் வெ.மாறன், ந.மு.க.அனீபா, தங்கவேலு, கவிஞர்.எத்திராசு, கவிஞர் இராமசாமி, கவிஞர் கூடல்மால் இறைவன், அ.மரியதாஸ், மு.கோவிந்தசாமி, க.கோபாலன், இராஜகோபால், ஒப்பிலான், கவிஞர் சையத் ஜாபர், பைம்பொழில் மீரான், க.குழந்தைவேல், ம.திருவள்ளுவர், க.அனந்தராமன், டி.பி.சாந்தி, பெ.ரமேஷ் போன்ற கவிஞர்கள் பத்திரிக்கைகள் வாயிலாகவும் கவியரங்குகள் வாயிலாகவும் கவிதைகள் எழுதியும் வாசித்தும் வந்தனர்.

நிகழ் காலக்கட்டம்

கலியமூர்த்தி, மௌனன் யாத்ரீகா, சேயோன்யாழ்வேந்தன், அதங்கோடு அனிஷ் குமார், பாட்டாளி, எட்வின், பொன்னிதாசன், நந்தவனம் சந்திரசேகரன், சித்திரபாரதி, கா.ஜெயராமன், ராஜேஷ்சந்திரா, பெரம்பலுார் செல்வம், மா.சந்திரசேகர், கவிஞர் குறளன்பன், கவிஞர் குணா, பாலரவி, ஜெயசக்திவேல், ச.பீர்.அக்பர்அலி, கீதாஞ்சலி பிரியதர்சினி, கி.சிதம்பரம், தி.மா.சரவணன், பிரேம்சந்தர், சிவ.வெங்கடேஷ், தமிழகன், பாரதி சண்முகம், பாரத்மனோகர், ராஜாரகுநாதன், சீத்தா வெங்கடேஷ், எஸ்.வி.பார்த்தசாரதி, இலக்குமணன், கருவை வேணு, தி.மா.தமிழழகன், நல்.ஜெயக்குமார், இனாம்குளத்துார் அபுபக்கர், கி.நடராசன், ஒவியக் கவிஞர் தி.அ.கணேசன், மணவை இந்திரஜித், அ. இரவிச்சந்திரன், மணிபாரதி, முகில், புதியகம்பன், கவித்துவன், திருவைக்குமரன், கு.வைரச்சந்திரன், ரத்திகா, தனலெட்சுமி பாஸ்கரன், ஆங்கரை பைரவி, நந்தலாலா, ரங்கராஜன், இளங்குமரன், கு.வைரச்சந்திரன், திருவரங்கம் சௌரிராஜன், மெய்யாத்துார் வேல்முருகன், தில்பாரதி, கப்பல் கவிஞர் கிருஷ்ணமூர்த்தி, கொட்டப்பட்டு சக்திவேலன், வாளசிராமணி, செல்வராசன் போன்றோர் கவிதை நுால்கள் வெளியிட்டும், இலக்கிய இதழ்களில் தனி கவிதைகள்  புனைவதுமாக தொடர்ந்து இயங்கி வருகின்றனர். 

சுதிர்செந்தில் : சிறந்த கவிஞரும் சிறுகதை எழுத்தாளரும் தெளிவான தலையங்கங்களை தொடர்ந்து அளித்துக் கொண்டிருப்பவருமான இவர் “உயிரெழுத்து“ என்ற இலக்கிய இதழை பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். சிறுகதைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும் இவ்விதழின் வழியே கவிஞர்கள், எழுத்தாளர்கள் என தொடர்ந்து காத்திரமான படைப்பாளிகளை தமிழ் இலக்கிய உலகிற்கு அளித்து வருகிறார். ‘ஒன்றுமற்ற ஒன்று, உயிரில் கசியும் மரணம், யாருடைய இரவென தெரியவில்லை, பூப்படைந்த மலர்களை கனிய செய்கையில்..’ என்ற நான்கு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது உயிரெழுத்து பதிப்பகம் எண்ணற்ற நுால்களை பதிப்பித்துள்ளது. ஆவணப்பட இயக்குநர், துணை இயக்குநர், நாடகக் கலைஞர் என்ற பன்முக திறமையாளர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த பின்வரும் ஆய்வறிஞர்கள் தமிழுக்கும் இலக்கியத்துக்குமாக வாழ்ந்தவர்கள்.. வாழ்பவர்கள் எனலாம். ஒவ்வொருவரும் தனித்த அடையாளங்களும் பற்பல பெருமைகளையும் தன்னகத்தே கொண்டிருப்பினும், அவர்களின் படைப்புகள் மட்டும் இங்கு குறிப்பிடப்படுகிறது.

ர.பஞ்சநாதம் பிள்ளை          -      ஏராளமான தலப்புராணங்கள்
அ.மு.சரவணமுதலியார்        -      திருவிளையாடற்புராணத்துக்கு பேரூரை,
                                          தமிழுணர்வு துாண்டும் கட்டுரைகள்
வி.நடராச அய்யர்              -      லோகோபகாரி, ஞானசந்திரிகா, இந்தியன்
                                          நியூஸ் – இவர் நடத்திய இதழ்கள்.
                                          ஞானத்திரட்டு, ஞானபூஷணி,
                                          தேசாந்திர ப்ரபா
நடேச முதலியார்             -      தனித்தமிழ்ச்சங்கம் நிறுவியவர்.
                                          திலகவதியார், புனிதவதியார்,சிறுவர்கடமை
கே.வேலாயுதக்கவுண்டர்       -      ஜீவகாருண்யம்தானா..? யேசுநாதரும்
                                          ஞானசம்பந்தரும், ஞானசம்பந்தர் வரலாறு
டி.கே.தெய்வசிகாமணி        -      மலைக்கோட்டையை பற்றிய ஆங்கிலநுால்
சிவஞானம்பிள்ளை          -      “சிவாஜி“ இதழை தொடங்கியவர்.
                                   பல இலக்கிய நுால்களின் வெளியீட்டாளர்.
                                   சென்னை மாகாண டைரக்டரி வெளியிட்டவர்
டாக்டர் பிஎஸ்.சுப்ரமணிய சாஸ்திரிகள் -      அறப்பளீஸ்வரர் அந்தாதி.
கோ.வன்மீகநாதன்                   -      ஜோதிவழியில்வள்ளலார்,முற்றுணர்ந்தோன்,
                                          பெரியபுராணம், திருவாசகம், திருக்குறள் -
                                          ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.
கொடுமுடி ராஜகோபால்            -      ஜெயபிரகாஷ்நாராயணன் வாழ்க்கைவரலாறு
                                          சாணக்கியன் ஆட்சிக்கலை
பேரா.ரம்பொலா மாஸ்கரேனஸ்     -      கிறிஸ்துவத் தமிழ் தொண்டர்கள்,
                                          தேம்பாவணி வசனம்,இலக்கியப் பொழில்
வி.ஜெயதேவன்               -      தமிழ் அகராதியியல், தமிழ் அகராதிகளின்
                                          வரலாறு
அறிஞர் மதனீ                 -      ஈ.வே.ரா.பெரியார் இஸ்லாத்தில் சேர்ந்தார்
                                          அல்லாஹ்வும் சாமியும், பொதுமறை எது?
                                          குர்ஆனா..?
முனைவர் மு.சி.கேசவன்      -      சிலம்பொலி, ஒரே வழி, பாரிமகளிர்
                                          குடிமக்கள்
முனைவர் கோ.கேசவன்       -      பொதுவுடமைஇயக்கமும் சுயமரியாதை
                                          இயக்கமும், திராவிட இயக்கத்தில் பிரிவு
முனைவர் கு.திருமேனி        -      நாடகச்சிலம்பு, கோவலன், இராமன்தமிழனே
                                     கம்பனுக்கு கதை கொடுத்தவன் வால்மீகியா
                                     மந்தாரை, மனோன்மணியன் திறனாய்வு
அ.ச.ஞானசம்பந்தம்           -      பெரியபுராணம் ஆராய்ச்சி, குறள் கண்ட
                                    வாழ்வு, கம்பன்கலை, தம்பியர் இருவர்,
                                    கிழக்கும் மேற்கும். கம்பன் – புதியபார்வை
                                   என்ற நுாலுக்கு சாகித்யஅகடாமி விருது                                                கிடைத்தது. 2000ஆம் ஆண்டு குறள்பீட
                                          விருது பெற்றார்.
ஊரன் அடிகள்                -      வள்ளலார் வாழ்க்கை வரலாறு
திருவருட்பாவை பதிப்பித்தவர்.
இரா.இளங்குமரனார்             -      தமிழ்வளம், இன்பவாழ்வு, மனவளபயிற்சி,
                                  கபிலர் அகவல், திருக்குறளில் ஒப்புரிமை                                         போன்ற நுாற்றுக்கும் மேற்பட்ட நுால்கள்
முனைவர் ச.சாமிமுத்து          -      1500 கவிதைகள், 200 கட்டுரைகள், 30
                                       நாடகங்கள், தமிழ் இலக்கிய வரலாறு
                                       போன்ற பத்து நுால்களை எழுதியவர்.
டாக்டர் கு.சுந்தரமூர்த்தி         -      ஏராளமான இலக்கிய, சைவ சமய நுால்கள்
ந.சுப்புரெட்டியார்              -      தன்வரலாறு, இலக்கியம், சமயம்,அறிவியல்
                                     ஆராய்ச்சி, திறனாய்வு, வாழ்க்கை வரலாறு
                                     என 88 நுால்களை எழுதியுள்ளார்
டாக்டர்.வா.செ.குழந்தைசாமி        -      நீர்வளத்துறையில் பல ஆய்வுக் கட்டுரைகள்
                                          நான்கு கவிதை தொகுப்புகள், சமுதாய
                                   சிந்தனைகள்,விதியே விதியே தமிழ்ச்சாதியே                                              தமிழ் எழுத்து சீரமைப்பு, இது கல்வியுகம்.
                                          இவரது “வாழும் வள்ளுவம்“ நுால் 1988ல்
                                          சாகித்திய அகாடமி விருது பெற்றது.
ந.சஞ்சீவி                 -      சிலப்பதிகார விருந்து, மானங்காத்த மருது
                                          பாண்டியர், வேலுார்ப்புரட்சி
பொற்கோ                 -      வாழ்க்கைப்பூங்கா, கோதை வளவன்
                                          உள்ளிட்ட ஏராளமான நுால்கள்
மணவை முஸ்தபா        -      கூரியரின் தமிழ் சொல்லகராதி, கணினிச்
                                  சொல்லகராதி உட்பட 30 நுால்களும் ஒரு
                                  இலட்சத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞான
                                   சொற்களுக்கு தமிழாக்கமும் செய்தவர்.
பிரேமா நந்தகுமார்         -      அமுதத்துளி உதிர்ந்தது, சிலப்பதிகாரம் –
                                  ஒரு ஆய்வு, திருப்பாவை, சுப்ரமணியபாரதி
                                  மாசுபடிந்த உறவுகள், இலக்கியப்பெருந்தகை
                                  போன்ற பல நுால்கள்.“விடுதலை“ என்ற
                                   மொழிப்பெயார்ப்பு நுால்
முனைவர் மா.இராமலிங்கம்     -   இரண்டாவது வருகை, நாளைக்கும் இதே
இடம்,பயணம்தொடரும்,எங்கெங்கு  காணினும் போன்ற பல நுால்கள்
அமுதன் அடிகள்              -      தமிழர் செல்வம், தனிநாயகம் அடிகள்,
                                     நெஞ்சம் மறப்பதில்லை, இத்தாலி நாட்டு
                                    வித்தக தமிழர், உலகெலாம் தமிழ்முழக்கம்
புலவர் மு.வைத்தியநாதன்       -      ஆராய்ச்சிக் கட்டுரைகள்
புலவர் அ.கணபதி              -      சைவதிருமுறைகள், சைவ சித்தாந்தம்
                                      தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள்
முனைவர் ப.ஆறுமுகம்         -      மாம்பழத் திருவிழா, மண்ணிலே ஒரு
                                      கற்பக விருட்சம், மன்னவனும் நீயோ,
                                      சுற்றுலா வணிகம்
முனைவர் ப.மருதநாயகம்       -      தொ.பொ.மீ. ஒரு எழுத்தாளர் என்ற நுால்
பூ.இர.குப்புசாமி                -      காவிரி அங்குமிங்கும், மண்ணுக்கேற்ற
                                     பொதுவுடமை, மக்கள் புரட்சியின் மாபெரும்
                                     கவிஞர், சட்டப்படி நாம் சூத்திரரே உட்பட
                                    பல நுால்க்ள
முனைவர் இராஜசேகர தங்கமணி    -  பாண்டியன் வரலாறு, இராஜேந்திரசோழன்
                                       கரூர் வரலாறு, கரூரும் கன்னித்தமிழும்.
குறளன்பன் ஆ.வே.இராமசாமி       -    சிந்தாமணிநயம், திருவள்ளுவர் தந்தவாழ்வு
                                        முயற்சி திருவினையாக்கும், திருக்குறள் –
                                        எளிய தெளிவுரை போன்ற 27 நுால்கள்
முனைவர் த.கோடப்பிள்ளை   -     அன்புத்தங்கை, அம்மை ஆண்டாள், தமிழ்                                   எழுத்தமைப்பு, வான்வழிவள்ளுவம்,                                              கம்மந்தான் யூசுப்கான், தமிழ்ப்பூக்கள்,
                                          எளிமைத்தமிழ் போன்ற பல நுால்கள்.
கே.எஸ்.ராஜு            -      பிர்லா மாளிகை மர்மங்கள், அண்ணா ஒரு
                               அற்புத அனுபவம், கரிகாலன் சகாப்தம்,
                                குமரியில் இமயம்.
கவிஞர் நந்தலாலா          -      தற்கால இலக்கியங்கள் குறித்து ஆய்வுக்
                                   கட்டுரைகள்
முனைவர் அ.ஆறுமுகம்      -      திருக்குறள் நினைவேடு,வழியடைங்குங்கல்
                                    குறள்விருந்து, திருக்குறளில் புதியபார்வை,
                                    எண்ணித்துணிக போன்ற பலநுால்கள்
சக்திசரணன்                 -      ஓதிமத்துாது, பனிமுத்தம், அரங்கர் இசை
                                   அமுதம், மாருதிநாற்பது
அ.ஜெய்குமார்               -      அர்த்தமுள்ள சிந்தனைகள் ஆயிரம்,
                                   வெற்றிக்கு சில சிந்தனைகள், பெண்களும்
                                    சமூகமும், இல்லற வாழ்க்கை விளக்கம்,                                         உலக நாகரிகமும் தமிழர் பெருமையும்
                                          போன்ற 39 நுால்கள்
டி.எஸ்.குலாம்ரசூல்         -      தீரர்திப்பு, இருஎலும்புக்கூடுகள், ஈத்முபாரக்,
                                  இந்தியாவை ஆண்ட முஸ்லீம்மன்னர்கள்,
                                   போன்ற 40க்கும் மேற்பட்ட நுால்கள்
கே.எம்.காதர்மொய்தீன்       -      தாருல்குர்ஆன் என்ற இலக்கிய இதழை
                                   நடத்தி வந்தார்.
ஏ.எம்.ஹனீப்                -      இஸ்லாம் நெறிமுறைகள் தத்துவங்கள்
                                   குறித்த கட்டுரைகள்
என்.தாஜ்முகம்மது          -      பிசாசு இதழின் துணையாசிரியர்,
                                  கத்தரிக்கோல் இதழை நிறுவியவர்
சையத் இப்ராஹீம்         -      ஜிகாத், இஸ்லாம் காட்டிய அரசியல்,
                                 இந்தியநாட்டு கதைகள், இஸ்லாமும்
                                 அதன்உட்பிரிவுகளும், முஸ்லீம்
                                கதைக் கொத்து போன்ற பல நுால்கள்
அனீஸ்பாத்திமா              -      நர்கீஸ் என்ற இதழை நிறுவியவர்
கே.ஆர்.கிருஷண்மூர்த்தி       -      உறையூர், அன்பில் பற்றிய தொல்லியல்
                                     வரலாற்று நுால், பழமொழி பற்றிய நுால்
துரை நமச்சிவாயம்           -      நமது விழாக்கள், அனைவருக்கும் ஆன்மீகம்
                                    சும்மாயிரு சுகமாயிரு, பல்சுவை-நல்சுவை,
                                     கிபி 2050ல் உலகம் எப்படியிருக்கும்,
                                    விஞ்ஞான மேதைகள்
முனைவர் கு.திருமாறன்      -      தனித்தமிழ் இயக்க வரலாறு
முனைவர் சுபாஷ்சந்திரபோஸ்  -    எது புதுக்கவிதை? பதிவும் பின்னடைவும்,
                                   தரவும் தகவலும், கல்வி கிபி2000 மற்றும்
                                    பல நுால்கள்
முனைவர் க.நெடுஞ்செழியன்    -    இந்திய பண்பாட்டில் தமிழும் தமிழரும்,
                                     தமிழ் இலக்கியத்தில் உலகாயதம்,
                                     சமூகநீதி, உலகத்தோற்றமும் தமிழர்
                                     கோட்பாடும்.
சக்குபாய் நெடுஞ்செழியன்     -      பாரதிதாசன் கவிதைகளில் மனிதநேயம்
முனைவர் இரா..சபேசன்      -      மின்னணு, மின்னியல்
                                   கலைச்சொற்களஞ்சியத்தை உருவாக்கியவர்
இளவரசு                    -      விடுதலை கவிதை நுால், இந்தியவிடுதலை
                                   இயக்கத்தில் பாரதிதாசன்
முனைவர் பே.க.வேலாயுதம்       -   பதிற்றுப்பத்து மன்னர்களின் காலம்,
                                    வடத்தமிழும்தென்தமிழும்,
                                    சங்ககால மன்னர் வரிசை
அம்பலத்தரசு                  -      பெரும்பிடுகு முத்தரையர் வரலாறு
கு.சி.தமிழரசன்                 -      கொடும்பாளுர் வேளிர் வரலாறு
முனைவர் கு.ப.கணேசன்        -      பாரதிதாசன் பாடல்களில் அகமும் புறமும்
சு.முருகானந்தம்               -      மண்டல்கமிஷன் யாருக்காக..?
முனைவர் ச.தங்கப்பிரகாசம்         -      பாரதிதாசன்பாடல்களில்பெரியார்சிந்தனைகள்
முனைவர் ஏ.எஸ்.டி.பிள்ளை           -      பின்நவீனத்துவம் பாகம்1, பாகம்2
முனைவர் எஸ்.இளங்கோ       -      இராஜாஜியின் படைப்புகளில் மனிதநேயம்,
                                      ஒப்பியல் இலக்கணத்தில் தொன்மவியல்
                                       தாக்கம்
முனைவர் ரவீந்திரன்          -      சிரித்துக் கொண்டே ஜெயிப்போம்,
                                     சாமர்செட்மாமின் புதினத்தில் காலம்
                                     கையாளும் முறை
முனைவர் நோயல் இருதயராஜ்    -   அமைப்பியல், மேல் அமைப்பியல்,
                                      அமைப்பியலின் வாதங்கள், மறுமொழி,
                                      அமைப்பியலில் பொதுப்புத்தியும்
                                      பொதுபுத்தியில் அமைப்பியலும்
இராஜேந்திரன் (கிராமியன்)      -      தமிழ் நாடகங்களில் திராவிட இயக்கத்தின்
                                     தாக்கம்
கோ.இராஜாராம்                -     அலுமினியப்பறவைகள், பாதல்சர்க்காரின்
                                     நாடகஙகள்(மொழிப்பெயர்ப்பு)
கண்ணகி சந்திரசேகரன்         -      புண்ணியபூமியும் போராட்ட மகளிரும்
திருக்குறள் ந.சண்முகனார்      -      பேரறிஞர் அண்ணா ஒரு பல்கலைக்கழகம்
செந்தமிழ்ச்செல்வன்            -      பாரதி ஒரு ஆய்வு, முத்தரையர்கள் வரலாறு
பேராசிரியர் லட்சுமி நாராயணன்   -      ஸ்தோத்திர மஞ்சரி

. பூரணச்சந்திரன்  

இலக்கிய விமர்சனம், கோட்பாட்டு ஆய்வுகள் ஆகியவற்றில் இவரது பங்களிப்புகள் முக்கியமானவை. தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு (1980) உட்பட 12க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட நுால்களை மொழியாக்கம் செய்துள்ளார்.. ஆந்திரக் கவிஞர் வரவர ராவ் எழுதிய சிறைப்பட்ட கற்பனை என்ற நூலின் மொழிபெயர்ப்புக்காக 2011இல் ஆனந்தவிகடன் இவருக்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கியது  சல்மான் ருஷ்தியின்நள்ளிரவின் குழந்தைகள்” (மிட்நைட்ஸ் சில்ட்ரன்) நூலுக்கு நாமக்கலில் உள்ள கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கியது. இந்துக்கள் - ஒரு மாற்று வரலாறு என்ற நூலுக்காக (Hindus - An Alternative History) 2016க்கான சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதை ஆனந்தவிகடன் வாயிலாக இவர் பெற்றார். மனூ ஜோசப் ஆங்கிலத்தில் எழுதிய Serious Man என்ற புகழ்பெற்ற புதினத்தை தமிழில் “பொறுப்புமிக்க மனிதர்கள்“ என்ற பெயரில் மொழிபெயர்த்தார், இந்த மொழிபெயர்ப்புக்காக 2016 ஆண்டுக்கான சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வு வரலாற்றினை வரைந்துகொடுத்தவர்.

எழுத்தாளர்கள்

எஸ்.எம்.நடேசசாஸ்திரி : தென்னாட்டு நாட்டுப்புறக் கதைகள், இந்து மத விழாக்கள் பற்றிய ஆங்கில நுால்களை எழுதியுள்ளார். துப்பறியும் நாவல்களை எழுதுவதில் இவர் முன்னோடி எழுத்தாளர்.

சு.வை.குருஸ்வாமி சர்மா : ஆரம்பகால நாவலாசிரியர்களில் ஒருவர். தமிழ் நாவல் படைப்பில் மூன்றாவது நாவலான பிரேம கலாவத்யத்-தை எழுதியவர்.

வரகவி அ.சுப்பிரமணிய பாரதியார் : குழந்தை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர்.

டி.கே.சீனிவாசன் எல்லைக்கப்பால், உலக அரங்கில், ஆடும் மாடும் போன்ற பல நுால்களை எழுதியவர்.

லகஷ்மி : 

ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், சுமார் நூற்று ஐம்பது நாவல்கள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், ஆறு மருத்துவ நூல்கள் என தொடர்ந்து இயங்கியவர். தமிழக அரசின் பரிசு உள்பட ஏராளமான இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். ஒரு காவிரியைப் போலஎன்கிற இவரது நாவல் சாகித்ய அகாதமி விருதினை வென்றது. இவருடைய சகோதரி நித்யா மூர்த்தி என்பவரும் ஓர் எழுத்தாளரே1987 ஆம் ஆண்டு தேவி வார இதழில்இரண்டாவது மலர்என்கிற தொடர்கதையை எழுதிக் கொண்டிருந்த லகஷ்மி அதனை முடிக்கும் முன்பே இறந்து விட நித்யா மூர்த்தி அதை எழுதி முடித்தார்.

லா.ச.ராமாமிர்தம்

லா..ரா.வின் முதல் கதை அவரின் 18வது வயதிலேயே வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. . ராவை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை “சிந்தாநதி“  தினமணி கதிரில் தொடராக வந்தது. லா..ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. அவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்குகின்றன. கட்டுரை நூல் "சிந்தாநதி" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டதுஇவருடைய படைப்புகள் அரசுடமை ஆக்கப்பட்டது தனிச்சிறப்பே.

குமுதினி 


சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, மொழிப்பெயர்ப்பு என இலக்கியத்தின் பல பிரிவுகளிலும் தொடர்ந்து இயங்கியவர். குறிப்பாக 1930-40 ஆம் ஆண்டுகளில் ஆனந்த விகடன்கல்கி, கலைமகள், மங்கை போன்ற இதழ்களில் இவரது  கதைகளும் கட்டுரைகளும் தொடர்ந்து வெளியாயின.  ஸ்ரீரங்கத்தில் வாழ்விழந்த பெண்களுக்காக ஒரு சங்கமும் பள்ளியும் தோற்றுவித்தார். காந்தியடிகளின் நினைவாகத் திருச்சியில் சேவா சங்கத்தைத் தோற்றுவித்தார்.

அகிலன்  

புதினம், சிறுகதை, நாடகம், சிறுவர் இலக்கியம், மொழிப்பெயர்ப்பு என எல்லா துறைகளிலும் நன்கு அறியப்பட்ட இலக்கிய ஆளுமை. சித்திரப்பாவை “ என்ற நூலுக்காக1975ஆம் ஆண்டின் ஞானபீடவிருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார்அதே ஆண்டு ராஜா சர். அண்ணாமலை விருதும் கிடைத்தது. “வேங்கையின் மைந்தன்“  என்ற நாவலுக்காக1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார். சீனம், மலாய், ஜெர்மன், ஆங்கிலம், ரஷ்ய மொழி போன்ற பல மொழிகளில் இவரது படைப்புகள் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது கதைகள் திரைப்படங்களாகியிருக்கின்றன.

கி.வா.ஜகந்நாதன் 

தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர். சிறந்த தமிழறிஞரும் கூட. கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார் . 1967 இல் இவரது  “வீரர் உலகம்“ என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.  கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. பரிசை நிறுவி வழங்கி வருகிறது.

ராஜம் கிருஷ்ணன் :

ஏராளமான புதினங்கள், சிறுகதைகள், பெண்ணியம் தொடர்பான கட்டுரைகளை எழுதியவர். பொதுவாக தனது படைப்புக்காகத் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் உள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்குவாழும் மக்களோடு நெருங்கிப் பழகி உண்மை நிலைமைகளை அனுபவப் பூர்வமாக உணர்ந்து, அதை எழுத்தின் வழியாக  கொண்டு வந்தவர்  1970 ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மண்கள்' என்ற நாவலை எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்து, அதன் தொடர்ச்சியாக 'முள்ளும் மலரும்' என்ற நாவலை எழுதினார். இவரின் 59 தொகுதிகள் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் கிடைக்கப்பெறுகின்றன. “வேருக்கு நீர்“ என்ற இவரின் புதினம் சாகித்ய அகாதெமி விருது பெற்றது. இவரது நூல்கள் தமிழக அரசால் 2009 ஆம் ஆண்டில் அரசுடமை ஆக்கப்பட்டன. முதன்முறையாக படைப்பாளி உயிருடன் இருந்தபோதே அரசுடைமை ஆக்கப்பட்டது இவரது நூல்களே

சுஜாதா 

துப்பறியும் கதைஅறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், சிறுவர் இலக்கியம், கட்டுரைத் தொகுப்புகள் என எண்ணிலடங்கா படைப்புகள் இவருடையவை. ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார். இவரின் முக்கியமான ஆக்கங்கள் சில திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. திரைப்படத் திரையிலும் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியவர். அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது. சுஜாதாவின் எழுத்துப் பணிக்காக தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் என்ற பெயரில் எழுதி வந்தார்.

கலைக்கோவன், கவிதாசரண், சு.முருகானந்தம், ந.விவேகானந்தன், கவிஞர் அமலன், லீமாரோஸ், வைரமாலை அந்தோணிசாமி, ஜவஹர் ஆறுமுகம், மழபாடி ராஜாராம், ம.ந.ராமசாமி, பூவாளுர் சுந்தரராமன், தமிழினியன், ஜெம்பு, விஜயநிலா, கண்டனுார் சொர்ணகிரி, சரஸ்வதி பஞ்சு, ஸ்ரீரங்கம் ஸ்ரீதர், பஞ்சாபகேசன், கலைமாமணி எம்.மஸ்தான், பால்ராஜ்துரை, உதிரிப்பூ சௌந்தர், எஸ்.பாலகிருஷ்ணன், மானோஸ், பிரபாஷ்கரன், ஆர்.விஜி, கிரிஜாமணாளன், கிருஷ்ணா, கல்கிதாசன், பாண்டியன்ஜி (உக்கிரபெருவழுதி), அம்மங்கை குமாரதேவ், எஸ்.ராஜகோபால், சேக்தாவூத், பொன்மலை தாயுமானவர், ஜெயவண்ணன், பாலரவி, உறந்தை உலகநாதன், உறந்தை கோபால் பாகவதர், வி.கே.சீனிவாசன், பழனிச்சாமி, ஆர்.பிரகாஷ் போன்றோர் முக்கியமான ஆக்கங்களை அளித்துள்ளனர். கு.விசுவநாதம், என்.ராகவன், சுகி சுப்ரமணியம், சக்தி சீனிவாசன் போன்றோர் வானொலி எழுத்தாளர்களாக புகழ் பெற்றனர்.

நிகழ் காலக்கட்டம்

கலைச்செல்வி, செம்பை முருகானந்தம், கமலக்கண்ணன், செல்வசுந்தரி, சேதுமாதவன், வை.கோபாலகிருஷண்னன், தமிழினியன், ரிஷபன், கிருஷ்ணா, சின்னதுரை, வை.தியாகராசன், துறையூர் முருகேசன், சுரேஷ் ஆறுமுகம், பாட்டாளி போன்றோர் சிறுகதை, நாவல் மற்றும் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகின்றனர்.

அருட்தந்தை அமுதன் அடிகள், திருச்சி சிவா, சு.முருகானந்தம், கவிஞர் நந்தலாலா பேராசிரியர் மணிமாறன், சி.எஸ்.கமலபதி, எஸ்.ஆல்பர்ட், வீ.ந.சோமசுந்தரம், கிராமியன், பூர்ணசந்திரன், நோயல் இருதயராஜ், முனைவர் சுபாஷ்சந்திரபோஸ், முனைவர் பாலகிருஷண்னன், பிரேமா நந்தக்குமார், ந.பெரியசாமி, புலவர் ந.வெற்றியழகன், முனைவர் ஜுலியன், அலிபாவா போன்ற அறிஞர்கள் இலக்கிய விமர்சனம் மூலமும் மேடைப் பேச்சுகளின் மூலமும் இலக்கியம் வளர்ப்பதில் பெரும்பங்களித்து வருகின்றனர்.

திருக்குறள் முருகானந்தம் என்று அறியப்படும் சு.முருகானந்தம் அவர்களும், தி.மா.சரவணன், பைம்பொழில் மீரான், கவிஞர் நந்தலாலா ஆகியோரின் கூட்டு முயற்சியில் நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி என்ற முக்கிய ஆவணநுால் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட தமிழில் அச்சேறியுள்ள சிற்றிதழ்கள் அனைத்தையும் சேகரித்து முக்கியமான தமிழ் தொண்டாற்றி வருகிறார் திரு.தி.மா.சரவணன். 

திரு.வீ.ந.சோமசுந்தரம்

வீ.ந.சோ என்று அழைக்கப்படும் இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் இலக்கிய முகமாக அறியப்படுபவர். “திருச்சிராப்பள்ளியில் நடைபெறும் இலக்கியக் கூட்டங்களின் மேடையில் வீ.ந.சோ-வுக்கென ஒரு நாற்காலி காத்திருக்கும்“ என்று “தி இந்து“ சமஸ் அவர்கள் குறிப்பிடுவார். “இந்தியநாடும் இறையாண்மைக் கோட்பாடும்“ “அச்சுறுத்துக்கிறது ஆதிக்கமொழி்“ என்ற இரண்டு நுால்களை வெளியிட்டுள்ளார். “இப்படிக்கு“ என்ற திங்கள் இதழை பதினைந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தலைமைக் குழு உறுப்பினர், தமிழியக்கத் துணைத் தலைவர் என அமைப்புகள் சார்ந்தும் செயல்பட்டு வருபவர்.

நாளை விடியும், நந்தவனம் போன்ற இதழ்கள் முறையே அரசெழிலன், மற்றும் நந்தவனம் சந்திரசேகர் ஆகியோரால் நடத்தப்பட்டு வருகிறது.

இலக்கிய அமைப்புகள்

தமிழ் இலக்கியம் அறிவியல் கழகம், எஸ்.பி.ஜி.கழகத்து மாணவர் தமிழ்ச்சங்கம், ஸ்ரீ சுகுந்த குந்தலாம்பிகை திருவருட் தமிழ்ச்சங்கம்., திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம், ஹரந்தை தமிழ்ச்சங்கம், திருவரங்கம் தமிழ்ச்சங்கம், கரூர் தமிழ்ச்சங்கம், லால்குடி திருவள்ளுவர் கழகம், திருக்குறள் கழகம், திருக்குறள் கலைக்காட்சி அமைப்பு, மண்ணச்சநல்லுார் திருக்குறள் பேரவை, திருக்குறள் கழகம், திருவள்ளுவர் கழகம், தொட்டியம் அடிகளார் மன்றம், திருக்குறள் பேரவை, திருச்சி திருக்குறள் பேரவை, திருக்குறள் பயிலகம், மணப்பாறை திருக்குறள் பயிற்றகம், திருக்குறள் பேரவை, திருவள்ளுவர் தவச்சாலை, திருக்குறள் அஞ்சல்வழி கல்வி மையம், தமிழியக்கம், பாவாணர் பாசறை, தனித்தமிழ்க் கழகம், உலகத்தமிழ் கழகம், உலகத் தமிழ் முன்னேற்றக் கழகம், பாவாணர் தமிழியக்கம், தமிழர் களம், நாம் தமிழர் இயக்கம், தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ்க்குடில், தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், தமிழக் கா.சு.பிள்ளை நினைவு இலக்கியக்குழு, முத்தமிழ் மன்றம், தமிழ் பேரவை, கீரனுார் தமிழ் மன்றம், தமிழ் இலக்கிய ஆய்வுப் பண்ணை, தமிழ் இலக்கிய மன்றம், முத்தமிழ்க் கலை மன்றம், கம்பன் மன்றம், முத்தமிழ் மன்றம், கோவிந்தம்மாள் நற்பணி மன்றம், சாஹித்யா, வாசகர் வட்டம், சோலைக்குயில்கள், துடிப்பு, மக்கள் கலை இலக்கிய மன்றம், தமிழ் இலக்கியக் கழகம், அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளை, தென்னகக் கலை இலக்கிய வளர்ச்சிக் குழு, புரட்சிகவிஞர் கலை இலக்கிய மன்றம், தமிழ் கோட்டம் போன்ற பல்வேறு அமைப்புகள் தமிழையும் இலக்கியத்தையும் வளர்த்தும், வளர்த்துக் கொண்டுமுள்ளன.

இவற்றில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், பாவாணர் தமிழியக்கம், சமூகசிந்தனை உயிர்ப்பியக்கம், களம், பைந்தமிழ் இயக்கம், தமிழ் கலை இலக்கிய பேரவை போன்ற இயக்கங்கள் நிகழ்காலத்தில் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றன.

இக்கட்டுரையை எழுதும் நோக்கில் எத்தனை முறை கேட்பினும் அலுக்காமல் தகவல்கள் தந்து உதவிய தோழர்களுக்கும், உதவாத நண்பர்களுக்கும் என் மீது நம்பிக்கைக் கொண்டு இப்பணியை அளித்த கணையாழி ஆசிரியர் ம.ரா அய்யா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

No comments:

Post a Comment