Search This Blog

Saturday 30 June 2018

கனவு (சிறுகதை)

ஜுலை 2018 காலச்சுவடில் வெளியானது


அன்று எங்களிடம் குறைவில்லாத பணம் இருந்தது. எங்களிடம் என்றால்.. எங்கள் தாத்தாவிடம்.. அப்பாவிடம்.. பிறகு என்னிடமும். எல்லோருக்கும் வீடு வாசலெல்லாம் ஒரே இடம்தான்.. பரம்பரையாக வந்த வசதி அல்ல.. தாத்தா கையை ஊன்றி கர்ணம் அடித்திருந்தார். அப்பாவுக்கு சம்பாத்தியத்தில் அத்தனை சிலாக்கியம் இல்லை.

Sunday 17 June 2018

கூடு


பதாகை 17.6.2018 இதழில் வெளியானது

எனது பெருவிரலோடு தன் சின்னஞ்சிறு கைகளை கோர்த்துக் கொள்வதில் அவனுக்கு பெருவிருப்பமிருந்தது. அது கிட்டத்தட்ட அதிகாலை பனிக்குள் ஒளிந்துக் கிடக்கும் மலையடுக்குகளை சூரியன் அணுகி நெடுநேரம் கழிந்த பிறகும் நாளிக்குள் மூழ்கிக் கிடக்கும் விருப்பத்தையொத்தது. அதனாலேயே பகல் கனியத் தொடங்குவது அவனுக்கு வாதையாக இருந்தது. பிறகு அதை விட பெரும்வாதைகள் அங்கு நிகழத் தொடங்கின. மரங்களை வெட்டியதாகவும், பறவைகளை சுட்டதாகவும், பன்றிகளை உண்டதாகவும் அவர்கள் வெவ்வேறு காரணங்களை குறிப்பிட்டாலும் குறிகள் எங்கள் நிலத்திற்கானவை என்பதை உணரவியலாத வயது அவனுக்கு.  மேற்கு வானில் மறைய எத்தனிக்கும் சூரியனின் செந்நிற ஒளிக்கீற்றுகளை போல நாங்கள் இரத்தம் சிந்தத் தொடங்கியிருந்தோம். அவனோ காடெங்கும் திரிந்தலைந்தலையும் வேட்கை கொண்டவனாக வளரத் தொடங்கினான். உயர்ந்த நெடிய தோற்றம் கொண்டவன் அவன். கரிய நிறமும் சற்றே வரிசை தவறிய பற்களுமாய் இருப்பான். கொழுத்து விளைந்த வயக்காட்டை இரவு நேரங்களில் அவனிடம் நம்பிக்கையாக ஒப்படைக்கலாம். சிறுத்தையின் காலடித்தடத்தில் தன் படர்ந்த பாதச்சுவடை ஒற்றி எடுப்பதில் பெருவிருப்பம் கொண்டிருந்தான்.



அன்று ஆபிசர்கள் கடமான் தேவைப்படுவதாக சொல்லியனுப்பியிருந்தனர். சமவெளிக்கும் எங்களுக்குமான இணைப்பை இவர்களிடமிருந்து நாங்கள் தொடங்கிக் கொண்டதெல்லாம் ஒரு காலம். எப்படியாவது இவர்கள் இணக்கமாகி விடமாட்டார்களா என்று ஏங்கிக் கிடக்கும் காலமிது. அசைவை நோக்கி குத்தீட்டியை எறிவது ஒன்றும் கடினமல்ல. கடமான் தட்டுதடுமாறி சொப்பங்குழிக்குள் விழுந்திருந்தது. கிடைத்த கிளைகளிலும் பிடிமானங்களிலும் கால் வைத்து புதர் அப்பிக் கிடந்த பள்ளித்தினுள் இறங்கினான். நின்று நிதானித்து  விருந்து பரிமாறுமளவுக்கு கொழுத்த மான் அது. இவனை கண்டதும் துள்ளியெழ முயன்று, இயலாமையில் மடங்கியது. அதன் தொடையில் குத்தி நின்ற குத்தீட்டியின் வழியே குருதி பெருகிக் கொண்டிருந்தது, அப்போதுதான் அதன் வயிற்றை கவனித்திருக்க வேண்டும். நல்லவேளையாக உள்ளிருக்கும் குட்டிக்கு அடி விழுந்திருக்காது என்ற ஆறுதல்பட்டுக் கொண்டான். குத்தீட்டியின் காயம் வலி ஏற்படுத்தாதவாறு நோகாமல் ஊனான்கொடியால் அதன் கால்களை கட்டி சாக்கில் சாய்த்து வைத்து சாக்கை கயிற்றில் இணைத்தான். கூட்டாளிகள் புன்னைமர கமலையில் கயிறு கட்டி இழுக்க, கடமான் மேலே வந்து சேர்ந்தது.

Friday 15 June 2018

மீட்சி


”இந்த இடத்தில நம்பளமாதிரி மனுசங்க ஒரு காலத்தில வாழ்ந்தாங்கன்னா நம்ப முடியில ஹெஃபி...” என்றேன்.. வானுார்தியின் வேகத்தை பொத்தான் வழியே குறைத்தப்படியே.
என்னை பற்றி சொல்வதென்றால் மினுாட் என்பது என் பெயர். அநீதிகளின் உச்சத்தை எட்டிய பின் வேறு வழியின்றி அற உணர்விற்குள் ஆற்றுப்படுத்திக் கொண்ட நவீன உலகத்தின் பிரஜை நான். மற்றபடி உலகம் சுற்றுவதில் ஹெஃபிஸை விட ஆர்வமானவள். தேடல்களுக்குள் வாழ்க்கையை நுழைத்துக் கொண்டு அதன் அர்த்தங்களில் ஜீவிக்கிறவர்கள் என்று எங்களை பற்றி மற்றவர்கள் கணிக்கலாம். அது உண்மையாகவும் இருக்கலாம்.
”அதுக்குதான் இத்தன கட்டுமானங்களும் சாட்சியா நிக்குதே.. நம்பித்தானே ஆகணும்..” என்றான் ஹெஃபிஸ். என் நண்பன். இருவரும் இருபதுகளின் இறுதியிருக்கிறோம். அதற்குள்ளாகவே நிறைய நாடுகளை பார்த்து விட்டோம். உலகம் சுற்றுவதற்காகவே உயிர் வாழ்வது போல ஞாயிறுகளை கூட உழைப்பாக்கி பணத்தை பத்திரப்படுத்திக் கொள்வோம். சுற்றுப்பயணத்துக்கான இடத்தை வெகு முன்பாகவே தீர்மானித்து விடுவோம். அது சம்பந்தமாக திரட்டும் தகவல்களும் எண்ண அலைகளும் பயணத்தை வெகுவாக சுவாரஸ்யப்படுத்தும். இந்தியாவுக்கான பயணத்திட்டம் வகுத்தும் நான்காண்டுகளாக ஏனோ தள்ளிக் கொண்டே போகிறது.

Monday 11 June 2018

மாயநதி


பதாகை இணைய இதழ் 10.05.2018ல் வெளியானது



செங்குந்தான பசுங்கோபுரங்களாய்ப் பூமி உயர்ந்திருக்க, இடையே குளிர்வான நல்லதங்காள் ஓடை சுழித்து நெளித்து நகர்ந்தது. ஓடையின் வழித்தடமெங்கும் பெரிதும் சிறிதுமான கூழாங்கற்கள் நிறைந்துக் கிடந்தன. காற்று நீரைத் தொட்டுக்கொண்ட சிலிர்ப்பில் கிறங்கித் தவழ்ந்தது. கரையோரமாக ஒதுங்கிக் கிடந்த கூழாங்கல் பாறையொன்றில் அமர்ந்து கால்களை நீரில் நனைத்திருந்தோம்.

”ஆயுசு முழுக்கவும் எங்கூடவே இருப்பியா...” உள்ளத்தில் வழிந்துக் கிடந்த அன்பை முடிந்தவரை கேள்வியில் இழைய விட்டேன். குரல் அதுவாகவே நெகிழ்ந்து குழைந்தது.

அது

சொல்வனம் பிப்ரவரி 2018ல் வெளியானது

அவன் கழுத்து வெட்டப்படுவதற்கு முன் கழுத்தோடு கையை வளைத்து அவனை அணைத்துக் கொண்டிருக்கிறேன்.  தலையை சாய்த்து சிரிக்கும் அவனின் பற்கள் அத்தனையும் முத்துகள். வரிசையான முத்துகள். இரத்தம் கசிந்த முத்துகள். அவை விகாரமாகி இளித்து அலைபேசியின் திரையிலிருந்து முன்னெழும்பி முகத்தருகே.. முகத்தருகே.. படர்ந்து.. பின் மெல்ல அடங்கி. அடங்கிய நேரத்தில் திரை இருளாகி இரத்த வண்ணமாக நிறைந்தது. மரணத்தின் நிறம் சிவப்பு.. பூமியெங்கும்.. மரணத்தின் காலடியோசைகள்.. ஆனால் இது இயற்கையானதல்ல.. வரவழைக்கப்பட்டது.. கொடூர மரணம். கொலை.. டயரில் நிரம்பிய காற்றை வெளியேற்றுவது போல கழுத்தை அறுத்து உயிரை வெளியேற்றிய மரணம்.. எதையும் மாற்ற முடியாது. சாதியை.. அது கிளர்ந்தெழுப்பும் ஆணவத்தை.. எதையுமே மாற்ற முடியாது..எல்லாமே நிபந்தனைக்குட்பட்டவை. நிர்பந்தங்களாலும் நிபந்தனைகள் உருவாகலாம். ஆனால் எதையும் மறு ஆக்கம் செய்ய முடியாது. மாற்ற முடியாது. மாற்றினால் மாற்றி விடுவார்கள். எல்லாவற்றையும்.. எல்லாவற்றையும்.


“சனியன் புடிச்ச செல்போன் எழவு.. அந்த எழவயே கைல புடிச்சுக்கிட்டு என்ன எழவுடீ பண்றே..” புடவை சரசரத்து கத்தியது. தேவகி என்று அதற்கு பெயர். ஒரு இழவே தாங்க முடியாதபோது எத்தனை இழவுகள். எத்தனை இரவுகள் கழிந்தாலும் அவனது இழவு களையை இழக்காமல் இன்னும் புதிது போல.. சொல்லப் போனால் இன்னும்.. இன்னும் முளைத்துக் கொண்டே.. கழிக்க கழிக்க கிளைத்து.. கிளைத்து.. கொடியைப் போல படர்ந்து படர்ந்து உடலை இறுக்கி.. ஆனால் எல்லாக் கட்டுகளை தளர்த்த வல்லது அது.

பெல்ஜியம் கண்ணாடி

பதாகை ஜனவரி 2018ல் வெளியானது

என்னிடம் பிரதிபலிக்காத கண்ணாடி ஒன்றுள்ளது. ரசமெல்லாம் போகவில்லை. ஒருவேளை பிரதிபலிப்பதற்கு ஏதுமில்லாமல் இருக்கலாம். இதற்கு முன் உடைபட்டிருந்தது என்பதை சட்டென கணிக்க இயலாதளவுக்கு பளிச்சென்று இருந்தது. உடைசல் பெருந்துண்டுகளாக இருப்பது ஒருவகையில் வசதிதான். சிறு வீறல்களெனில் பார்வைக்கு தென்பட்டு விடும். குடிசை யாருடையதோ என்றாலும் அப்படியும் இப்படியுமாக ஓரளவுக்கு அதை பொருத்தி வைத்திருந்தேன். யாரோ இதை பெல்ஜியம் கண்ணாடி என்றார்கள். பிறப்பிடமும் வாழிடமும் முற்றிலும் வேறானவை என்பதாக இதைப் புரிந்துக் கொண்டேன். அதற்கே இருபத்துநான்கு வருடங்கள் தேவைப்பட்டிருந்தது.



“உங்க பேரு..?”

பெல்ஜியத்தில் வைத்தப் பெயரா..?

Thursday 7 June 2018

மருக்கையம்மன்


“குறி“ மே-ஜுன் 2018 சிற்றிதழில் வெளியான சிறுகதை



இடைப்பட்ட ஐந்து வருடம் என்பது நீண்ட நெடுங்காலமல்ல என்னைப் பொறுத்தவரை. ஆனால் இம்முறை எனக்கு ஆர்வமிருந்தது. ஒருவேளை பணத்தால் ஆகும் பயனெல்லாம் ஓரளவு அனுபவித்த பிறகு ஏற்படும் சலிப்பான மனநிலைக்கு இதை ஒரு மாற்றாகக் கருதியிருக்கலாம். அதோடு கோவிந்தின் புலம்பல் வேறு. என்ன சொன்னாலும் அவர்களின் தலை ஆமோதிப்பாகவே அசைகிறதாம்.

இதைக் கேட்பதற்கு உங்களுக்குப் புதுமையாக இருக்கலாம். நானும் அப்படித்தான் முதலில் உணர்ந்தேன். இப்படி ஒரு கிராமத்தை நான் பார்த்ததேயில்லை என்றேன். இத்தனைக்கும் பள்ளி நாட்களில் எனக்கு நன்கு அறிமுகமான கிராமம்தான் அது. கோவிந்த் என் இளமைக்கால வகுப்புத் தோழன். என் அப்பாவின் பணி, பிறகு என் அயல்நாட்டு பணி இவையெல்லாம் என்னை அவனிடமிருந்து முற்றிலும் பிரித்து விட, ஐந்து வருடங்களுக்கு முன் ஒருவழியாக நாங்கள் ஒருவரையொருவர் மீட்டுக்கொண்டோம். மீட்டுக்கொண்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தியப் பயணங்கள் சம்பிரதாயமாக மாறிக்கொண்டிருந்த நேரமது. சிறுவயதுத் தோழமை பயமறியாத ஆர்வத்துடனும், கொச்சையான கோபதாபத்துடனும் ஆர்ப்பாட்டமான எதிர்பார்ப்பு அல்லது எதிர்பார்ப்பற்று கட்டமைக்கப்படுவதால் யாதார்த்தம் தொலையும் வயதுகளில் பால்ய தோழமை மீதிருக்கும் பிரேமை கூடி விடுகிறது.  அதுவே பயணத்திற்கு ஒருவித ஈர்ப்பை கொடுத்தது. இரண்டு முழு நாட்களை அவனுடன் ஒதுக்கிக் கொண்டேன். அவனும் ஏமாற்றவில்லை. இரு பிள்ளைகளுக்குத் தகப்பனாக, கிராமப் பஞ்சாயத்தின் தலைவனாக, தாட்டியமான ஆகிருதியுடன் வாய் நிறையப் பல்லாக என்னை கட்டிக் கொண்டான். அவனின் மனைவியும் வாய் நிறைய வரவேற்றார். கணவனைப் போலவே அவரும் நீள அகலங்கள் நிறைந்தவராக இருந்தார். குனிந்தால் நிமிரவெல்லாம் முடியாது. இருவருக்கும் நிறைய அன்னியோன்யம் இருந்தது. மனைவியைக் கேட்காமல் அவன் தும்மக் கூட விரும்ப மாட்டான் என்று தோன்றியது.