மனிதனில் உள்ளுணர்வாக பதியப்பட்டிருக்கும்
அடிப்படை இச்சைகள் அவனை வாழ்தலை நோக்கி உந்துகின்றன. இணைந்தே, நாகரிகமும்
உருவாகிறது. அறத்திற்கான விழுமியங்கள் நாகரிக வாழ்வை கட்டமைக்கிறது.
இவ்விழுமியங்களை உருவாக்குவது இலக்கியம் எனலாம்.. இச்சைகளுக்கும் அறத்துக்குமான போராட்டத்தை
வாழ்க்கை எனலாம். அதேசமயம் விழுமியங்கள் பண்பாட்டு சிக்கலுக்குள் அடைப்பட்டு
போகும்போது இலக்கியம் அதன் கட்டற்ற தன்மைக்குள் ஒழுங்கமையாது போய் விடும் அபாயமும்
உண்டு.
Search This Blog
Thursday, 30 November 2017
தொகுப்புகளில் வெளியான பரிசுப் பெற்ற கதைகள்
![]() | ||
வானதி விருது 2017 பெற்ற சிறுகதைகள் தொகுப்பு இவள பிடிக்கல.. என்ற எனது கதையின் பெயரில்
|
சிறுகதை திறனாய்வில் என் கதையும்.. வசந்தா பதிப்பகம் 2015 |
Tuesday, 28 November 2017
“ஆழத்தின் “அறம்“
குறி நவம்பர் 2017ல் வெளியானது.
ஆழம் என்றொரு சிறுகதை. 2016ல் எழுதினேன். மூடப்படாத
ஆழ்த்துளை கிணற்றையும் அதன் பின்னிருக்கும் அரசியலையும் பிணைப்பாக்கி எழுதிய கதை. கணையாழி
இதழில் சிறந்த குறுநாவல் வரிசையில் ஜுன் 2016ல் இக்கதை வெளியானது. பின்னர் அது எனது
“இரவு“ என்ற சிறுகதை தொகுப்பில் (2016 என்சிபிஹெச் வெளியீடு) இடம் பெற்றது. இந்த தொகுப்பு
பரவலான கவனத்தையும் மூன்று விருதுகளையும் பெற்ற தொகுப்பு. மேலும் இக்கதை இலக்கிய சிந்தனை அமைப்பின் சிறந்த
12 சிறுகதைகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக தொகுக்கப்பட்டு
கடந்த 2017 ஏப்ரலில் வெளியானது. மேலும் பலரின் சிறுகதைகளைத் தொகுப்பாக்கி வெளியிடப்பட்ட
ஒரு சிறுகதைத் தொகுப்பில் ஆழம் என்ற இச்சிறுகதை இடம் பெற்றதோடு இத்தொகுப்பின் பெயரும்
‘ஆழம்’தான். என் சிறுகதையின் பெயரையே தலைப்பாக்கி,
கடந்த 2016ல் இத்தொகுப்பு வெளியானது.
அறம் என்ற திரைப்படம் திரைக்கு வந்த பின்னர்
அதன் கதைக் குறித்து நிறைய நண்பர்கள் அலைபேசியில்
தொடர்புக் கொண்டு பேசினர். இது உங்களின் ஆழம்
கதையை ஒத்து அமைந்துள்ளது என்றனர். எனக்கும் அவ்வாறே தோன்றியது. மேற்கண்ட “ஆழம்“ கதைகளின் வெளியீடுகளை விவரித்து, எனது
“பிளாக்“ல் பதிவிட்டிருந்த அக்கதையின் இணைப்பையும் சுட்டி, என் முகநுால் பக்கத்தில்
என் ஆதங்கத்தைப் பகிர்ந்திருந்தேன்.
Thursday, 23 November 2017
ஓசை
போடிமாலன் சிறுகதைப் போட்டி 2017ல் பரிசு பெற்றக்கதை
நவம்பர் 2017ல் செம்மலரில் வெளியானது.
குத்த வைத்த கால்களை கைகளால் கட்டிக் கொண்டு அதில் தலையை சாய்த்து அமர்ந்திருந்தேன். என் கணவன் மிகுந்த பலசாலி என்று உணர்ந்த தருணம் ஒன்றிலும் இவ்விதமாகதான் அமர்ந்திருந்தேன். அமர்ந்தவாக்கில் அவர் என்னை அப்படியே உயரே துாக்கி ஏந்த.. நான் விழுந்து விடும் பயத்தில் கால்களை உதற முயல.. ம்ஹும்.. அவரின் பிடியிலிருந்து என்னால் விலக இயலவில்லை. உயரே.. உயரே.. துாக்கி தலைக்கு மேல் கொண்டு சென்று விட்டார். என் பயமெல்லாம். விலகியோட.. சந்தோஷத்தின் உச்சத்தில் மிதந்த நாட்கள் அவை.
Subscribe to:
Posts (Atom)
-
கணையாழி டிசம்பர் 2017 இதழில்.. மனிதனில் உள்ளுணர்வாக பதியப்பட்டிருக்கும் அடிப்படை இச்சைகள் அவனை வாழ்தலை நோக்கி உந்துகின்றன. இணைந்தே, ...
-
வனம் மே 2024 படுத்துக் கொண்டேயிருப்பது பெரும் பாரமாக தோன்ற அவள் எழுந்து நடக்கத் தொடங்கினாள். வெளியே வெயில் வெளிர்மஞ்சள் பந்தலிட்டிருந்தது. ...
-
May 2024 வல்லினம் இணைய இதழில் பிரசுரமானது. ‘பௌத்தம் என்பது மாயமல்ல. அதை உங்கள் வாழ்வில் அனுமதித்த கணமே அற்புதங்கள் எதுவும் நிகழ்ந்து விடாது....