இருள் விலகியிருக்காத அதிகாலைப்பொழுது அது. கங்கை ததும்பலாக ஓடிக் கொண்டிருந்தது. மேலும்கீழுமான நீரின் எழும்பல்கள் இளங்காலைக்கான ஒளியை ஏந்தியபடி தனக்கென பிரத்யேக சத்தங்கள் ஏதுமற்றதுபோல ஓவியமாக நகர்ந்துக் கொண்டிருந்தன. இமயத்திலிருந்து உருட்டிக் கொண்டு வரப்பட்டு சிதறலாக கிடந்த பாறைக்கற்களை நுரைகளாக கடந்தோடியது கங்கை. எங்கோ விடப்பட்ட தீபங்களும் மாலைகளும் நதியை புனிதமாக்கியபடி மிதந்தன.
Search This Blog
Tuesday, 20 November 2018
Friday, 16 November 2018
Thursday, 15 November 2018
முத்துபொம்மு (சிறுகதை)
பதாகை நவம்பர் 2018 இதழில் வெளியானது.
கருவேலங்காட்டுக்குள்
புதைந்துக் கிடந்தது அந்த குடியிருப்பு. மண்சுவரும் கீற்றுக்கூரையுமாக ஒழுங்கமையாத
வரிசைக்குள் வீடுகள் நெருங்கிக் கிடந்தன. படுக்கவும் உடுக்கவும் தவிர்த்து மீதி புழக்கமனைத்தும்
வெளியே சிதறியிருக்க, சாக்கடையாக தேங்கிக் கிடந்த புழங்குநீரை ஈக்கள் கொண்டாடிக் களித்தன.
பத்தேறிய கரிப்படிந்த பாத்திரங்களை புழங்காத நேரத்தில் உருட்டி விளையாட நாய்களுக்கு
அச்சமிருப்பதில்லை. குடங்களில் பத்திரப்படுத்தியிருந்த பிளாஸ்டிக் நீர் சூடேறிக் கிடந்தது.
சோற்றுக்கஞ்சியின் தடம் பதிந்த தரைகள், பாயோடு படுக்கையோடு கிடக்கும் வயதானவர்கள் என
யாரையும் எதையும் மிச்சம் வைக்காமல் மதிய வெயில் குடியிருப்பை எரிச்சலாய் சூழ்ந்திருந்தது.
வெயிலை உறிஞ்சிக் கொண்டு காற்றிலசைந்த கறிவேலஞ்செடிகள் மெலிதாய் மலவாடையை பரப்பியது.
Friday, 9 November 2018
Subscribe to:
Comments (Atom)
-
கணையாழி டிசம்பர் 2017 இதழில்.. மனிதனில் உள்ளுணர்வாக பதியப்பட்டிருக்கும் அடிப்படை இச்சைகள் அவனை வாழ்தலை நோக்கி உந்துகின்றன. இணைந்தே, ...
-
கணையாழி இலக்கியப் போட்டி 2017ல் சிறுகதைப் பிரிவில் பரிசு பெற்ற கதை.. பிப்ரவரி 2017 கணையாழியில் வெளியானது வீடு நெட்டுக்கும் திண்ணை ஓடிய...
-
இந்தியா அல்லது பாகிஸ்தான் ராணுவத்தில் பணி செய்வதற்காகத் தங்கி வி்ட்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் மதத்தின் பெயரால் நடந்துக் கொண்டிருக்கும் மிக மி...