Search This Blog
Sunday, 5 February 2023
'அவள்' - சிறுகதை 2012ல் அமுதசுரபியில் வெளியான கதை
வழக்கம்போல் திங்கள்கிழமையின் பரபரப்பிற்குள் அரசு அலுவலகம். வருகை பதிவேடு மூடுவதற்குள் அலுவலகம்; வந்த கதை, காலை அறிவிக்கப்பட்ட அரியர்ஸ்க்கு, இன்றே அரசாணை எண் கிடைக்குமா? மேலதிகாரியின் அறைக்குள் சென்ற பெண் அலுவலர் எப்போது வெளியே வந்தார்? அதிரஅதிர கவலைப்படும் அலுவலக பணிக்குள் எங்குமே ஒட்டாத அவள் நிலை.
மனம் நழுவி நழுவி காலை நேரத்திற்கே சென்றது.
Saturday, 4 February 2023
தேய்புரி பழங்கயிறு - பாவண்ணன் முன்னுரை
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு 09.01.1915 அன்று திரும்பி
வந்தார்.கோகலேயின் சொல்லை ஏற்று இந்திய மக்களைப் புரிந்துகொள்வதற்காக இந்தியாவின் எல்லாப்
பகுதிகளுக்கும் பயணம் செய்தார்.பிறகு அவுரி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சம்ப்ராணுக்குச்
சென்று போராட்டத்தைத் தொடங்கினார்.அகிம்சைவழியிலான அவருடைய சத்தியாகிரகப் போராட்டத்தை
ஒரு புதுமையான அணுகுமுறையாக நாடே உற்று நோக்கியது.மெல்ல மெல்ல அந்த அணுகுமுறைக்கு ஆதரவு
பெருகியது.
எதிர்ப்பைக்கூட அமைதியான வழியில் வலிமையோடு முன்வைக்கமுடியும் என்பதை அவர் ஒருங்கிணைத்த
ஒத்துழையாமை இயக்கம் உலகுக்கு உணர்த்தியது.அவருடைய போராட்டமுறைக்கு நாடெங்கும் ஆதரவு
பெருகியது.ஆதரவுக்கு இணையாக மக்களிடையில் அவருக்கு எதிர்ப்பும் இருந்தது.அவருடைய மதநல்லிணக்கப்பார்வையை
மதத்துக்கு எதிரான ஒன்றாக குற்றம் சுமத்தும் சூழல் உருவானது.கடைசிக்கட்டத்தில் மதங்களின்
அடிப்படையில் நாட்டைப் பிரிப்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியபோது, மதக்கலவரங்கள்
பெருகின.
பல ஆண்டு காலமாக கனவு கண்ட விடுதலை கண்ணுக்கெதிரில் நிஜமென 15.08.1947 அன்று
நிகழ்ந்த தருணத்தில், அதைக் கொண்டாடும் மனநிலையில் காந்தியடிகள் இல்லை.கலவரங்களில்
சிக்கி சின்னாபின்னமான பகுதிகளுக்குச் சென்று, அங்கு வாழும் மக்களிடையில் அமைதி திரும்புவதற்காகப்
பாடுபட்டார்.கெடுவாய்ப்பாக, ஓர் இடத்தில் அமைதி திரும்பியபோது இன்னொரு இடத்தில் கலவரம்
வெடித்தது.அந்த இடத்தில் அலைந்து திரிந்து அமைதியை நிலைநாட்டியபோது மற்றொரு இடத்தில்
அமைதி குலைந்தது.இவ்வாறாக உடல்நலம் குன்றிய தன் இறுதிக்காலத்தில் அமைதியை நிலைநாட்ட
காந்தியடிகள் அங்குமிங்கும் அலைந்து முயற்சி செய்தபடியே இருந்தார்.30.01.1948 அன்று
பிரார்த்தனைக்கூடத்துக்கு நடந்து செல்லும் வழியில் இந்து மத ஆதரவாளன் ஒருவனுடைய துப்பாக்கிக்குண்டுக்கு
காந்தியடிகள் பலியானார்.
தேய்புரி பழங்கயிறு
காந்தி எனும் உணர்வு
காந்தியடிகள் தனி வாழ்வும் பொது வாழ்வும் ஒன்றாக்கிக் கொண்டு வாழ்ந்தவர் என்பதாலும் நாட்டின் மிகப் பெரிய நிகழ்வுக்கு காரணமானவர் என்பதாலும் அவருடைய வரலாற்றை புனைவாக்கும்போது அது சமூக அரசியல் போராட்டங்களோடு இணைந்தவொன்றாகவே அமைந்து விடும். அவர் பற்றற்றவர், கடமையை செய்... பலனை எதிர்ப்பார்க்காதே என்ற கீதையின் தத்துவத்தை வாழ்க்கையாக வாழ்ந்தவர், ஆன்மீக அரசியலை முன்னெடுத்தவர், வெவ்வேறு மதங்களாயினும் அவை பயணிக்கும் பாதை வேறு வேறு எனினும் சேருமிடம் ஒன்றே என்பதை உணர்ந்தவர், சத்தியமே கடவுள் என்று நம்பியவர், உண்மை, சத்தியம், அகிம்சை என்ற மூன்று ஆயுதங்களைக் கொண்டு அவர் நடத்திய சுதந்திரப் போராட்டம், சத்தியாகிரகம், உண்ணாநோம்பு, ஒத்துழையாமை என்ற வழிமுறைகளால் உலக வரலாற்றில் புது அத்தியாயத்தை எழுதிச் சென்றது. ஒரு கிறித்துவரை விட ஏசுவின் கொள்கையை அதிகம் உணர்ந்தவராக, இஸ்லாம் மதத்தவரை வார்த்தைகளால் மட்டுமல்ல, தன் இறுதி வரை வாழ்க்கையாலும் சகோதரர்களாக ஏற்றுக் கொண்டவராக, பிரிட்டிஷாரை கூட எதிரியாக கருதாது, கருத்து நிலையில் எதிர் நிலையில் நிற்பவர் என்ற தெளிவுக் கொண்டவராக வாழ்ந்தவர் அவர்.
அவரின் விசேடங்கள் உள்நாட்டவரையும் வெளிநாட்டவரையும் கவர்ந்திழுத்தது. அவர் செய்வனவெல்லாம் செய்திகளாயின. அவர் செல்லும் இடங்களெல்லாம் நாட்டின் மையங்கள் என்றாகின. அதே சமயம் அவரின் கருத்துகள் மத பழமைவாதிகளை கோபம் கொள்ள வைத்தது. ‘மகாத்மா’ என்றும் ‘பாப்பு’ என்றும் அழைக்கப்பட்ட அவர், தான் வாழும் காலத்திலேயே தன் மீதான அவதுாறுகளையும் சந்தித்தார். ஆனால் அவர் போற்றுதலையும் துாற்றுதலையும் சமமாகவே பாவித்தார். தன் மீதான வழிப்பாட்டு மனநிலையை அவர் அனுமதிக்கவேயில்லை. மகாத்மா என்ற பதம் கூட அவருக்கு சுமையானதுதான். இறுதியில் தான் கட்டி காத்த அகிம்சை என்ற பேராயுதம் தன் கண்ணெதிரே நிர்மூலமாகி இந்துக்களும் முஸ்லிம்களும் இனி சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலையை அடைந்து இலட்சக்கணக்காக உயிர்கள் பலியாகி நாடு துண்டாடப்பட்டு, சுதந்திரம் கிடைக்கப் பெற்றபோது அவர் அதிகாரம் என்ற மையத்திலிருந்து முற்றிலும் விலகி கல்கத்தாவின் தெருக்களில் இந்து முஸ்லிம் ஒற்றுமை வேண்டி அலைந்துக் கொண்டிருந்தார்.
இத்தனைக்கும் மத்தியில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை, மனைவி மற்றும் நான்கு மகன்களை கொண்டதாக இருந்தது. அவரது அசாதாரணங்களை இயல்பாக்கிக் கொண்ட மீதி ஐவரை போன்று அவரது மூத்த மகன் ஹரிலாலால் இருக்க முடியவில்லை. அதே சமயம் தந்தையின் மீதான உரிமையும் பாசமும் அவரிடமிருந்து அவரை விலகவும் விடவில்லை. அதே நிலைமைதான் தந்தைக்கும். தந்தைக்கும் தனயனுக்குமிடையிலான இப்போராட்டம் அந்த வீட்டின் ஒரே பெண் உறுப்பினரான கஸ்துாரை இறப்பு வரைக்குமே நிம்மதி இழக்க வைத்திருந்தது.
தென்னாப்பிரிக்காவில் இருந்தவரை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் இருந்த மகன் அவர்கள் இந்தியாவுக்கு திரும்பிய பிறகு கட்டுப்பாடற்றவராகி விடுகிறார். இறப்பு வரைக்கும் தொடரும் இந்த ‘உள்ளே வெளியே’ ஆட்டத்தின் புனைவே இந்நாவல். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்புவதற்கு முன்பு வரையிலான நிகழ்வுகளுக்கான புனைவு ‘ஹரிலால் S/o மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி’ என்ற பெயரில் நாவலாக சென்றாண்டு (ஜனவரி 2021) வெளியானது. இந்நாவலை அதன் தொடர்ச்சி எனலாம். ஆனால் இரண்டும் புனைவுப் பாத்திரங்களின் தொடர்ச்சியற்ற, முழுக்கவும் இந்திய மண்ணில் நடைபெற்ற நிகழ்வுகளை கொண்ட இரு வேறு நாவல்கள். பொதுவாக கதாபாத்திரங்களை சூழ்நிலைக்கேற்ப மாற்றம் செய்துக்கொள்ளும் உரிமை புனைவில் உண்டு. ஆனால் இந்நுாலை பொறுத்தவரை வெகு முன்னெச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும். ஏனெனில் புனைவில் கூட காணாத உண்மை அந்த மனிதரிடம் இருந்தது. அதனாலேயே இந்த நாவல் எனக்கு நெருக்கமென்றாகிறது.
ஹரிலால் த/பெ மோகன்லால் கரம்சந்த் காந்தி நாவல் குறித்து எழுத்தாளர் பாவண்ணன்
எங்கள் அலுவலகத்தில் சதாசிவராவ் என்பவர் வேலை செய்துவந்தார். அவருடைய அப்பாவின் பெயர் சாம்பசிவராவ். அவர் சுதந்திரப்போராட்டங்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறைக்குச் சென்றவர். ஒரு காலத்தில் அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது சதாசிவராவுக்கு ஏழு வயது. மாதத்துக்கு ஒருமுறை சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு பெங்களூருக்கு வந்து சிறைச்சாலையில் கைதிகள் சந்திப்பு நேரத்தில் சில நிமிடங்கள் பார்த்துவிட்டுத் திரும்பும் அம்மாவோடு சதாசிவராவும் வருவார். அம்மாவிடம் பேசுவதைவிட சிறுவனான அவரிடம்தான் அவர் அதிக நேரம் பேசுவது வழக்கம்.
ஒருநாள் சாம்பசிவராவுக்கு சிறையிலிருந்து விடுதலை கிடைத்தது. ஆனால் அவர் வீட்டுக்குத் திரும்பிச் செல்லவில்லை. அங்கிருந்து வார்தா ஆசிரமத்தை நோக்கிப் புறப்பட்ட வேறொரு குழுவுடன் ஆர்வத்தோடு சேர்ந்துகொண்டார். பிறகு அங்கிருந்தும் புறப்பட்டு வட இந்தியாவுக்குச் சென்றுவிட்டார். அடுத்து சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மறைந்துவிட்ட செய்திமட்டுமே வீட்டுக்கு வந்து சேர்ந்தது. குடும்பத்தினரை அவர் சந்திக்கவே இல்லை.வீட்டிலிருக்கும்போது கதைசொல்லி பாட்டு பாடி சிரிக்கவைத்த கணங்களும் சிறைக்கம்பிகளுக்குப் பின்னாலிருந்தபடி பெயர்சொல்லி அழைத்து புன்னகைத்த கணங்களும் மட்டுமே அப்பாவின் நினைவுகளாக சதாசிவராவின் நெஞ்சில் நிறைந்திருந்தன. ஆனால் அவருக்கு தன் அப்பாவின் மேல் எவ்விதமான கசப்புணர்வும் இல்லை. தாத்தாவின் பராமரிப்பும் அம்மாவின் உழைப்பும் அந்தக் குடும்பத்தைத் தாங்கி நின்றன. அவர் கண்ணும் கருத்துமாகப் படித்து பட்டம் வாங்கி அரசு வேலையில் அமர்ந்தார். அப்பாவின் நினைவிலிருந்து அவரால் மீள முடியவில்லை. அப்பாவை நினைக்கும்போதெல்லாம் பெங்களூரு சிறைச்சாலைதான் அவர் மனத்தில் விரிந்து நின்றது. அதற்காகவே அவர் பெங்களூருக்கு மாற்றல் பெற்று வந்தார்.
பீஷ்மரின் மகன் – ஹரிலால் நாவலை முன்வைத்து
by ஜா.ராஜகோபாலன்
வல்லினம் July 1, 2022 இதழில் வெளியானது.
காந்தி – கடந்த 125 ஆண்டுகளில் உலகை வெவ்வேறு விதங்களில் பாதித்த பெயர்களில் முக்கியமான பெயர். மிக அதிகமான எண்ணிக்கையில் நூல்கள் எழுதப்பட்ட பெயர்களில் முதன்மையான பெயர். ஒருவரது பெயர் ஒரு விழுமியத்தின், சிந்தனைமுறையின், லட்சியத்தின் சொற்பொருளாக மாறும் அதிசயத்தை உலகுக்கு இன்று வரை காட்டிக் கொண்டிருக்கும் பெயர். இந்தியா உட்பட உலகின் ஒவ்வொரு மூலையிலும் எவராவது இன்றும் அந்தப் பெயரால் வழங்கப்படும் லட்சியத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். காந்தியை ஒரு ஆளுமையாகக் கொண்டு எழுதப்பட்ட பல புத்தகங்களில் அவரது ஆளுமையை வியக்கும் புத்தகங்கள் அளவுக்கே அவரது ஆளுமையை விமரிசிக்கும் புத்தகங்களும் உண்டு. அவரது ஆளுமையை ஆழமாக விமரிசிக்கும் எவரும் தவறாது எடுத்தாளும் பெயர் ஹரிலால். காந்தியின் மூத்த மகன். மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியின் அதிகாரபூர்வ வாரிசு. காந்தி குடும்பத்தின் வாரிசு நிரையில் முதல் மகன். ` காந்தியே தன்னால் தன் நிலையைப் புரிய வைக்க முடியாமல் தான் இவரிடம் தோல்வி அடைந்ததாக ஒப்புக்கொள்ளும் மனிதர்.
ஆலகாலம் நுால் விமர்சனம்
வளநாடு சே.சுப்ரமணியன் அவர்களின் ஆலகாலம் நாவல் குறித்த விமர்சனம்
-
கணையாழி டிசம்பர் 2017 இதழில்.. மனிதனில் உள்ளுணர்வாக பதியப்பட்டிருக்கும் அடிப்படை இச்சைகள் அவனை வாழ்தலை நோக்கி உந்துகின்றன. இணைந்தே, ...
-
April 10, 2021 Solvanam E-magazine, காந்தியை சுமப்பவர்கள் - காந்திய கதைத்தொகுப்பு, மொழிமாற்றம் செய்யப்பட்டு கன்னட தொகுப்பு, மற்றும் கன்னட பத...
-
ஜுலை 2018 காலச்சுவடில் வெளியானது அன்று எங்களிடம் குறைவில்லாத பணம் இருந்தது. எங்களிடம் என்றால்.. எங்கள் தாத்தாவிடம்.. அப்பாவிடம்....





