Search This Blog

Thursday 13 December 2018

'அற்றைத்திங்கள்' நாவல் குறித்து எழுத்தாளர் பா.கண்மணி

கலை,

அற்றைத்திங்கள் படித்துவிட்டேன்! தலைப்பே மயக்குகிறது. இப்படியொரு சமூக உணர்வுள்ள நிகழ்காலப் பிரச்சினையைப் பேசும் நாவல் தமிழில்-அதுவும் பெண் எழுத்தாளரால்! கர்வமாக இருக்கிறது .


எவ்வளவு தகவல்கள்-அறிந்துகொள்ள! பிரச்சார நெடியடிக்காதவண்ணம் காடு தன் வாசத்தைக் கதைநெடுகப் பரப்பியிருக்கிறது. காட்டை இதுவரை கண்டிராத நான்  காட்டிற்குப் போய்வந்ததாக  உணர்ந்தேன் .அதை நேசிக்கவும் ஆரம்பித்துவிட்டேன்.தைரியமான ,சுவாரசியமான,மனதை ஆற்றாமைக்கு உட்படுத்தும்  அரிய நாவல். தமிழகத்தில்(இந்தியா முழுதும்தான் ) இப்போது நடக்கும் கொடுமைகளை சமரசமின்றித்  தோலுரித்துக் காண்பிக்கிறது நாவல்-அதுவும் மிகையே இல்லாமல்.

பெண் என்கிற ஒரே காரணத்தினால்  பரணிக்கு இருக்கும் தடைகளை ஆங்காங்கு கோடிட்டிருப்பது  தேவையான ஒன்று. இந்நிலையில்  குடும்பத் தலைவியான கலை இந்நாவலை எழுத எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் ?!அந்த குணா பாத்திரம் அதிக அடையாளமின்றி சப்பென்று இருக்கிறதோ ?நாவலின் ஆரம்பமும் முடிவும் கவித்துவம் திங்களாகப் பொழிகிறது .முடிவை வாசகர் இஷ்டத்திற்கு எடுத்துக்கொள்ளலாமோ ? 

                                                                                                                                              

No comments:

Post a Comment