Search This Blog

Sunday, 13 January 2019

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளத்திலிருந்து..

இன்று எழுதவரும் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் என்பது பெண்ணின் எழுத்துமுறையும் களங்களும் முன்னரே வகுக்கப்பட்டுள்ளன என்பதுதான். எப்படி மரபான குடும்பச்சூழலில் பெண்ணின் இடமும் புழங்குமுறையும் அறுதியாக வரையறை செய்யப்பட்டுள்ளனவோ அப்படி.இன்று ஒரு பெண்ணெழுத்தாளர் வேறுவழியில்லாமல் இரண்டு முகங்களையெ சூடிக்கொள்ள வேண்டியிருக்கிறது. குடும்பச்சூழலை எழுதுபவர். அல்லது பெண்ணியர். முன்னவர் பழைமைவாதி, பின்னவர் புரட்சிக்காரர் அல்லது கலகக்காரர். முன்னவருக்கு பின்னவர் நேர் எதிரி என்பதனால் உண்மையில் முன்னவரே பின்னவரை வரையறைசெய்கிறார். பெண்ணியம் என்றால் என்ன என்றால் அந்தக் குடும்பப்பெண் என்ன சொல்கிறாளோ, எதை நம்புகிறாளோ, எப்படி இருக்கிறாளோ அதற்கு நேர் எதிரானவர், அவ்வளவுதான்.

maya
எந்தப் படைப்பாளிக்கும் இத்தகைய ‘சட்டைகள்’ அசௌகரியம் உருவாக்குபவை. ஏனென்றால் ஒருவர் எழுதவருவதே இத்தகைய அடையாளங்களில் இருந்து விடுதலைகொண்டு பறந்தெழும்பொருட்டுதான். ஆற்றலற்ற படைப்பாளிகள் மட்டுமே எளிய அடையாளங்கள் வழியாக தங்களைக் காட்டிக்கொள்ள விரும்புவார்கள். மிக அரிதாகவே தனக்கென முன்னரே சமைக்கப்பட்ட அடையாளங்களை கடந்துசெல்லும் படைப்பாளிகள் உருவாகிறார்கள். 
தமிழ்ப் பெண்படைப்பாளிகளில் கலைச்செல்வி அத்தகைய எழுத்தாளர். பொதுவழிகளிலிருந்து ஒதுங்கியிருப்பதன் வழியாகயே தனக்கான சிறிய வழி ஒன்றை உருவாக்கிக்கொள்ள முயல்பவர். பெரும்பாலும் சமகால எளிமையான கருத்துநிலைகளின் செல்வாக்கு இல்லாமல் நேரடியாகவே வாழ்க்கைச் சித்திரங்களை அளிக்கும் கதைகளை எழுதிவருகிறார்

No comments:

Post a Comment