Search This Blog

Wednesday, 16 January 2019

விஷ்ணுபுரம் இலக்கிய விழாக்கள்



கடந்த (2018) டிசம்பர் 21,22 தேதிகளில் கோவையில் நடந்த விஷ்ணுபுரம் விழாவிற்கு சென்றிருந்தேன். கடந்த நான்காண்டுகளாக சென்று வருகிறேன். தமிழகமெங்கும் இலக்கிய முன்னெடுப்புகள்,  அமைப்புகள், விருதுகள், அதை வழங்கும் விழாக்கள் என இலக்கியம் தன்னளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இம்மாதிரியான விழாக்களுக்கும் விஷ்ணுபுரம் விழாவுக்கும் நிறைய வித்தியாசங்களை உணர முடிகிறது.



1) இரண்டு நாட்கள் முழுக்கவும் இலக்கியம் மட்டுமே பகிர்ந்துக் கொள்ளப்படுகிறது.  அவை மேம்போக்கான பகிரல்கள் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள்  எழுத்தாளர்களாக மாறிவிடுமளவுக்கு இலக்கியத்தின் அடுத்தடுத்த படிநிலைகள்  இங்கு அசால்ட்டாக விவாதிக்கப்படுகிறது.

2) இங்கு யாரும், யாருக்கும் எதிரிகளல்ல. கருத்து வேறுபாடுகள்,  பகைமை பாராட்டல்கள் என்பதெல்லாம் இல்லை.  இலக்கியம் மட்டுமே முக்கியம். 

3) அரசியல், கொள்கைகள்,  தனிப்பட்ட கருத்துகள். என யாரும் எதையும் முன்வைப்பதில்லை. 

3) தனிமனித துதி அறவே கிடையாது.  விவாதங்கள் இலக்கியத்தை விட்டு விலகாது செறிவான பாதைக்குள் இட்டுச் செல்வதும், தேவையற்ற பேச்சுகள், அலைபேசி உபயோகங்கள், குடி, கொள்கை பேச்சுகள் போன்ற எதற்கும் இடமளிக்காத தீவிர இலக்கிய செயல்பாடுகள் ஜெயமோகனுக்கானவை.


4) இலக்கியமற்ற ஏதொன்றும் ஒருநொடி கூட விவாதிக்கப்படுவதில்லை. போலவே,  ஜெயமோகன் அவர்கள் தன்னை எதிலும் முன்னிறுத்திக் கொள்வதுமில்லை. 




5) முறைமை.. முறைமை.. அத்தனையும் முறைமை. சிறப்பு அழைப்பாளர்களை முறைபடி அறிமுகப்படுத்துவதும், வேற்று மாநில இலக்கியத்தை இங்கு கொண்டு வருவதும், திரும்பும் இடமெல்லாம் இலக்கியத்தின் முக்கிய பிரமுகர்கள் எவ்வித ஒளிவட்டமும் இன்றி நடமாடுவதும், நேரத்தை மிக சரியாக திட்டமிடலும், உணவும் தங்குமிட பேணலும் என்று எதிலும் குறைவில்லாத நிறைவான திட்டமிடல் இதன் சிறப்பம்சம்.

6) அரசாங்கம், பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகள் என அதிகாரமும் பணமும் கொண்டவர்கள் செய்திருக்க வேண்டிய செயலை, அல்லது அவர்கள் எக்காலத்திலும் செய்ய முன்வராத செயலை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் செய்கிறது. 

அதனை பின்னிருந்து ஒளிர செய்வது ஜெயமோகனின்  இலக்கியதாகம்.

தமிழ் இலக்கியம் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறது. 

No comments:

Post a Comment