எழுத்தாளர் கலைச்செல்வியின் கதைகள் குறித்து..
பிரசவ வெளி கதையை முன்வைத்து....
இந்த இடத்தில் சமீபத்தில் ஜெயமோகன் எழுதிய பிரதமன் கதையைநினைக்கலாம்.பாயசம் கதையில்,உணவுத் தயாரிப்பு விவரணைகள் எந்த இடத்திலும் இடம் பெறவில்லை.ஆனால் கேசரியும் பிரதமனும் படிப்பவர்கள்,சமையலறைக்குச் சென்று செய்து பார்த்துவிடலாம் போன்ற விவரணைகள்...பிரதமன் கதையை எழுதியதும் அதைச் சாப்பி டாசைப்பட்ட ஜெயமோகன் மனைவியிடம் கேட்க,வெளியூரில் இருக்கும் மகள் வந்த தும் செய்து தருவதாக க் கூறுகிறார் என்று பதிவிட்டுள்ளார்.இதைக் கேசரியோடு நினைத்துப்பார்த்துக் கொள்ளலாம்.பெண்கள் தங்களுக்காக சமைக்கும் சூழல் மனத் தடையாக இருக்கிறது...தன் குழந்தைகளுடன் பேசும் தனி மொழியாக இனிப்புப் பண்டங்களை மாற்றிக் கொள்கிறார்கள்..அத் தனி மொழி பேசுமிடத்தில் கொண்டவனுக்கும் இரண்டாம் இடம்தான்..இங்கு மகனுக்கான உணவை பிசைந்து வைக்கும் லா.சராவின் கிண்ணிகளை நினைக்கலாம்.
பிரதமனில்,பாயசம் பக்குவமடைந்து வாசம் வீசுவதை அறியும் அவரால் பெண் தன்னைத் தரத் தயாராக கனிந்துநிற்கும்நொடியையும் அறிந்தவராய்த்தானே இருப்பார்.பிரதமனின் ஒரு சொட்டைக் கூட வாயில் விடாதவர் என்பது பிரதமனுக்கு மட்டுமல்ல என்பதை சாதாரண வாசகனும் எட்டிப் பிடித்து விடுவான்.
இனிப்பைத் தயாரிக்கும் போதே ஓர் உல்லாசம் கூடி விடுகிறது என்பது போல இனிப்பு பற்றிய கதைகளைப் படிக்கும்போது மகிழ்வு துவங்கும்.இந்த மூவருமே மனிதனின் மூர்க்க நொடிகளைக் காட்டி அந்த மகிழ்வைத் தள்ளி விடுகிறார்கள்.இக் கதைகள் காட்டும் இனிப்பு என்பது இனிப்பு மட்டுமல்ல வாழ்வின் கசப்பும்தான்.மூன்று கதைகளும் பேசுவது அதைத்தான்.
கடைகளைக் காலி செய்ய மறுத்து தலைமுறை தலைமுறையாக வஞ்சிப்பவனின் பெண்களை விலைக்கு வாங்கிய புதிய உரிமையாளனின் ஆட்கள் இழுத்துச்செல்கிறார்கள்..காலி செய்ய வைக்கமுடியாத கடைஉரிமையாளனிடம் குறைந்த விலைக்குவாங்கிய மனிதர்கள் பணம் கொடுக்காமல் அவன் வீட்டுப் பெண்களை இழுத்துச் சென்று ஏன் எழுதி வாங்கவில்லை,என்ற கேள்வியைப் படிப்பவர்களுக்குள் உருவாக்குகிறது.....அறத்தில் கூட குறைந்த பட்ச அறம் என்ற அளவு கோல்கள் எட்டு என்ற தொடர்சிந்தனைகளை உருவாக்குகிறது..ஒரு கதை முடியும் இடத்தில் வேறு கதைகள் துவங்கும் என்ற வகையில் இருகதைகளும் சிறந்த கதைகள் ஆகின்றன.
தன் கணவனைக் கொன்றவன் வெடி வைத்திருப்பது தெரியாமல் போவதைத் தடுக்க நினைக்கும்இடம் பெண்ணின் மன ஓட்டங்களை ப் பதியுமிடத்தில் மட்டும் அல்ல..சிறு வருணிப்பில் கூடத் தனித்து நிற்கிறார்..உதாரணமாக ஆடுமேய்க்கும் ஒருத்தியின் உடையை வர்ணிக்கிறார் இப்படி.நல்ல மிட்டாய் ரோஸில் இருந்த சட்டை துவைக்கத் துவைக்க மிட்டாயை வெளியே துப்பியிருந்த து.
கதைத் களனுக்கான தகவல் தரவுகளை யார்வேண்டுமானாலும் மெனக்கெட்டுத் திரட்டிவிடலாம்..ஆனால் அதைத்தரும் உத்தியில் எழுத்தாளரின் நுண்ணுணர்வு கலைத்துவமாக க கை கூடவேண்டும்..இப்புதினத்தில் சரியான பதம் கிடைத்துள்ளது.கல் உடைக்கும் தொழிலின் மிக நுண்ணிய விவரணைகளும் எந்த இடத்திலும் துருத்தவில்லை.இது நடந்திருக்காவிட்டால் சங்கம்..போன்ற ஏராளமான இடதுசாரி நாவல்களின் வரிசையில்இதுவும் சென்று சேர்ந்திருக்கும்.
படித்து முடித்த ஒருவர்,டெலிபோன் பூத் வைத்த ஒருவர் பற்றியோ,சோடா கலர் விற்ற ஒருவர் பற்றியோ நினைப்பார்...இதுதான் இப்புதினத்தின் வெற்றி..
பிரசவ வெளி கதையை முன்வைத்து....
ஆண் பெண் பேதம் எழுத்திற்கு இல்லை,தான் ஒரு பெண் என்பதற்கான எந்தச் சலுகையையும்,எழுத்துலகம் தனக்குத் தரவேண்டியதில்லை..என்று திடமாக நம்புபவர் கலைச்செல்வி.ஆனால் இங்கு நான் சொல்ல விரும்புகிறேன். இவர் எழுதிய பிரசவவெளி
...என்ற கதை,எல்லா ஆண் எழுத்தாளர்களும் சேர்ந்து எழுதினாலும் எழுத முடியாத கதை. பொதுவாக ஜனனத்தையும்,மரணத்தையும் எழுதும் படைப்புகளில்ஒருவிதமான நேர்பொருளற்ற வாக்கியங்களின் உலவலை,நவீனத்துவம் என்ற பெயரில் சந்தித்துத்தான் ஆகவேண்டும். இதற்கு புதுமைப் பித்தனின் சென்னை நகரத் தெருவில் இறந்து கொண்டிருந்தவனின் கதை கூட விலக்கல்ல..ஆனால் சிறு குழந்தையைக் குறியீடாக்கியதன் மூலம் அந்த பூடகத்தை வென்றுவிடுகிறார் பு.பி. ஆனால் கலைச்செல்வி இத்தகு இடத்தை அனாயாசமாகக் கையாள்கிறார்..செவ்வியல் போக்கின் பலத்தையும்,நவீனப் போக்கின் பலத்தையும் எடுத்து தனதாக்கிக் கொள்ளும் ஒரு தனி நடையைக் கட்டமைக்கிறார். ஒரு பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் நுழைவது முதல் ,குழந்தையோடு வீட்டில் ஆயாசமாகப் படுப்பது வரை எந்த தருணத்தின் துளியும் விடுபடாமல் வடித்து எடுக்கிறார்...பெண்கள் தங்கள் உடல்மொழியின் அப்பட்டத்தால் படைப்பை ஆபாசமாக்குகிறார்கள் என்று குட்டி ரேவதி யிலிருந்து எதிர்கொண்டுவரும் கருத்தியலுக்கான நேர்மைத்திற பதிலாக இக்கதையை எடுத்துக்கொள்ளலாம்.
வலியோடு அவஸ்தைப் படுவதை விட குழந்தையோடு இறந்து போகலாம்....என்று ஒரு பெண் நினைக்கக் கூடும் என்ற அதிர்ச்சியைத் தருவதிலிருந்து ஆரம்பமாகிறது கலைச்செல்வியின் அதகளம். வலியில் அலறும்பக்கத்து பெட் பெண் பிரசவத்தில் எனக்கு சீனியர் அவள் அனுபவிப்பது எல்லாம் அடுத்து எனக்கு...என்ற நகைச்சுவை இடையில்... இந்தப் பிரசவத் தினத்தைக் குறித்து நான் கொண்டிருந்த பயங்கள் ஒன்று கூட மிகையானதல்ல... பிரசவம் ரொம்பக் கஷ்டமானதுன்னா இத்தனை கோடி ஜனக் கூட்டம் எப்படி பெருகியிருக்கும் என்று எனக்கு நானே தேற்றி வைத்தவைகள் எல்லாம்பொல பொலத்து உதிர்ந்து கொண்டிருந்தன என்ற விவரிப்பாகட்டும் அத்தனையும் துல்லியமான பெண்மொழிகள்.
பிறந்த குழந்தையைப் பார்க்க வந்தவர்கள் தூங்கவிடாமல் பேசுவதும்,பால் இருக்கல்ல.. என்று கேட்பதும் எரிச்சலூட்டுகிறது. அப்படியேசெருப்பைக் கழட்டி அடித்துவிடலாமா என்று தோன்றிய எண்ணத்தைக் கஷ்டப்பட்டுஉள்வாங்கிக் கொண்டேன்...என்ற வரிகள் இதுவரை தாய்மையின் பேரால் பூச்செழும்பியிருக்கும் ஒப்பனையைக் களைந்து வீசுகிறது.. இது நேர்மையின் முகம்.. இந்த வலியைப் புரிந்து கொள்ள முயற்சி செய்...என்று கோரும் எழுத்து. இதுதான் கலைச்செல்வியின் பலம்.
பாயசம்,பிரதமன்,அப்புறம்கேசரி
தி.ஜானகிராமனின் பாயசம் கதையை மறுபடியும் படிக்கத் தோன்றியது,கலைச் செல்வியின் கேசரி கதை.
எழுபத்தேழு வயதுப் பெரியவர் சாமநாது அறுபத்தாறு வயது அண்ணன் மகனின் வளர்ச்சி கண்டு உள்ளுக்குள் வெந்து புளுங்குகிறார்.அண்ணன் மகனின் கடைசிப் பெண் கல்யாணம் வெகு சிறப்பாக நடக்கிறது.தன் சொந்த மகள் இளம் வயதி்ல்,விதவையாக கண் முன்னே நிற்கிறாள்.தாங்க முடியாத சாமநாது விருந்திற்கு வைத்திருந்த பாயசத்தை ஒற்றை ஆளாக க் கவிழ்க்கிறார்.பெருச்சாளி விழுந்த தாக க் கதை கட்டுகிறார்.இதுவரை ஆண் உள்ளுணர்வாக நகரும் கதை,...நான் இல்லாட்டா இப்ப எலி பாஷாணம்தான் கிடைச்சிருக்கும்.பாயசம் கிடைச்சிருக்காது...பெண் அவரை முள்ளாகப் பார்த்தாள்,கண்ணில் முள் மண்டுமோ,சாமநாதுவுக்கு அந்தப் புதரை பார்க்க முடியவில்லை...என்று சொல்லும் இடத்தில் பெண் உள்ளுணர்வு பேசும் கதையாக மாறுகிறது.சாமநாதுவின் விசத்தனத்தைப் பெண் உணர்கிறாள்.சாமநாதுவின் விஷக் கொடுக்கிற்கு முன்னோட்டமாய் கதை ஆரம்பத்தில் ஒரு காட்சியைக் காட்டுகிறார் தி.ஜா...தான் சம்பாதித்த சொத்தில் சித்தப்பாவிற்கு என்று தானம்தந்த தில் குறை காணாதீ்ர்கள் என்று நியாயம் சொல்லும் மனைவியின் மேல் விஷக் கொடுக்கு பாய்ச்சுகிறார் சாமநாது.நீ அவனுக்குப் பரிஞ்சுண்டு கூத்தாடறதைப் பார்த்தா நீ என் ஆம்படையாளா எங்க அண்ணா ஆம்படையாளான்ணே புரியலியே....இந்த விஷம்தானே பாயசத்தையும் கவிழ்த்திருக்கும்.
கலைச்செல்வி எழுதி இருக்கும் கேசரி கதை, ஒரு வயசாளிப் பெண்,தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேசரியைப் பார்த்ததும், கனவிலும் கேசரி வருகிறது.கேசரி செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவளுக்கு தித்திப்பை வரவழைத்த து.கணவர் சர்க்கரை நோயாளி..தனக்கு மட்டுமாக கேசரி செய்யப்போகிறேன் என்று சொல்லக்கூடத்தயக்கம்..செய்ய முடியாதபடி அடுத்தடுத்து அன்றாடப் பணிகள்..கடைசிவரை கேசரி செய்யப்படாமலே கதை முடிகிறது.
இந்த இடத்தில் சமீபத்தில் ஜெயமோகன் எழுதிய பிரதமன் கதையைநினைக்கலாம்.பாயசம் கதையில்,உணவுத் தயாரிப்பு விவரணைகள் எந்த இடத்திலும் இடம் பெறவில்லை.ஆனால் கேசரியும் பிரதமனும் படிப்பவர்கள்,சமையலறைக்குச் சென்று செய்து பார்த்துவிடலாம் போன்ற விவரணைகள்...பிரதமன் கதையை எழுதியதும் அதைச் சாப்பி டாசைப்பட்ட ஜெயமோகன் மனைவியிடம் கேட்க,வெளியூரில் இருக்கும் மகள் வந்த தும் செய்து தருவதாக க் கூறுகிறார் என்று பதிவிட்டுள்ளார்.இதைக் கேசரியோடு நினைத்துப்பார்த்துக் கொள்ளலாம்.பெண்கள் தங்களுக்காக சமைக்கும் சூழல் மனத் தடையாக இருக்கிறது...தன் குழந்தைகளுடன் பேசும் தனி மொழியாக இனிப்புப் பண்டங்களை மாற்றிக் கொள்கிறார்கள்..அத் தனி மொழி பேசுமிடத்தில் கொண்டவனுக்கும் இரண்டாம் இடம்தான்..இங்கு மகனுக்கான உணவை பிசைந்து வைக்கும் லா.சராவின் கிண்ணிகளை நினைக்கலாம்.
பிரதமனில்,பாயசம் பக்குவமடைந்து வாசம் வீசுவதை அறியும் அவரால் பெண் தன்னைத் தரத் தயாராக கனிந்துநிற்கும்நொடியையும் அறிந்தவராய்த்தானே இருப்பார்.பிரதமனின் ஒரு சொட்டைக் கூட வாயில் விடாதவர் என்பது பிரதமனுக்கு மட்டுமல்ல என்பதை சாதாரண வாசகனும் எட்டிப் பிடித்து விடுவான்.
இனிப்பைத் தயாரிக்கும் போதே ஓர் உல்லாசம் கூடி விடுகிறது என்பது போல இனிப்பு பற்றிய கதைகளைப் படிக்கும்போது மகிழ்வு துவங்கும்.இந்த மூவருமே மனிதனின் மூர்க்க நொடிகளைக் காட்டி அந்த மகிழ்வைத் தள்ளி விடுகிறார்கள்.இக் கதைகள் காட்டும் இனிப்பு என்பது இனிப்பு மட்டுமல்ல வாழ்வின் கசப்பும்தான்.மூன்று கதைகளும் பேசுவது அதைத்தான்.
ரயிலில்...பிரியாணி
அண்மையில் ஜெயமோகனின்..ரயிலில் ..கதையைப் படித்தபோது,ஏற்பட்ட ஒரு பதற்றம்,பெங்களூரில் சாகித்யகாடமி கருத்தரங்கில் எழுத்தாளர் கலைச்செல்வி பிரியாணி கதையைப் படித்தபோது ஏற்பட்டது..எனக்குத்தான் அப்படியா..என்று சுற்று முற்றும் பார்த்தேன்..ஆங்கில மொழி பெயர்ப்பில்... படிக்கப்பட்ட அந்த கதை,தமிழ் தெரியாத பல பெண்களின் முகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியதை பார்க்கமுடிந்த து.
இரு கதைகளுமே வேறு வேறு இயங்குதளத்தைக் கொண்டவை என்றபோதிலும் பெண்களை வன்முறைக்குள்ளாக்குவது என்ற புள்ளியில் ஒற்றைக்கோட்டிற்குள் வருகிறது.ஆதிக்கத்தை நிலை நிறுத்த பெண் உடலைப் பயன்படுத்துதல் என்பதை சுட்டுகிறார்கள்.படிப்பவர் மனதைத் தூக்கி வாரிப் போடச் செய்கிறார்கள்..பெண்வன்முறை கருத்தரங்குகள் சாதிக்க முடியாதவைகளை ஒற்றை ஒற்றை எழுத்தாளர்கள் சாதிக்கிறார்கள்..இத்தனைக்கும் எந்தவித ஆபாசவார்த்தைகளின் பயன்பாடு இன்றி சாதிக்கிறார்கள்...பிரியாணியில் சமூகத்தின் பார்வையில்படாமல் திருட்டுத்தனமாக செயல்படுகிறான்.ரயிலில்,கதையில் ஊரே பார்க்க பெண்களை இழுத்துச்செல்கிறான்.இரு கதை ஆசிரியர்களுக்குள்ளும் செயல்படுவது அறப் பிறழ்வை பொறுத்துக்கொள்ளாமை..என்பதே.ரயிலில் நாற்பது நாய்கள்..என்று சீரழித்தவர்களைச் சொல்கிறார் ஜெமோ..பிரியாணியில் கலை,எண்ணத்தொடங்கினாள் ஒன்று இரண்டு....என்கிறார்.ஒரு நுட்பமான கதை சொல்லியின் மொழிக்கும் செய்தித்தாளின் அப்பட்டமான மொழிக்கும் உள்ள வேற்றுமை இதுவன்றி வேறென்ன...தீ..என்றால் நாக்கு சுட வேண்டும்..என்ற புகழ் சொற்கள் நினைவிற்கு வருகின்றன..தீ..என்ற சொல் இன்றியே சுட்டுப் பொசுக்க முடியும் என்கின்றன இவ்விரு கதைகளும்.
கடைகளைக் காலி செய்ய மறுத்து தலைமுறை தலைமுறையாக வஞ்சிப்பவனின் பெண்களை விலைக்கு வாங்கிய புதிய உரிமையாளனின் ஆட்கள் இழுத்துச்செல்கிறார்கள்..காலி செய்ய வைக்கமுடியாத கடைஉரிமையாளனிடம் குறைந்த விலைக்குவாங்கிய மனிதர்கள் பணம் கொடுக்காமல் அவன் வீட்டுப் பெண்களை இழுத்துச் சென்று ஏன் எழுதி வாங்கவில்லை,என்ற கேள்வியைப் படிப்பவர்களுக்குள் உருவாக்குகிறது.....அறத்தில் கூட குறைந்த பட்ச அறம் என்ற அளவு கோல்கள் எட்டு என்ற தொடர்சிந்தனைகளை உருவாக்குகிறது..ஒரு கதை முடியும் இடத்தில் வேறு கதைகள் துவங்கும் என்ற வகையில் இருகதைகளும் சிறந்த கதைகள் ஆகின்றன.
எழுத்தாளர் கலைச்செல்வியின் முதல்நாவல்..சக்கை.
இயந்திரமயமாதல் எப்படி ஒருதொழில் சார்ந்த கூட்டத்தினரை பாதிக்கிறது என்பதைக் கூறுகிறார்..தொழிற்புரட்சி உலகம் முழுவதும் இப்படியான படைப்புகளைத் தந்துள்ளது...ஆனால் இதுவரை தமிழ் நாவல் உலகம் காட்டாத கல் உடைக்கும் தொழிலாளர் வாழ்க்கையைப் பேசிஉள்ளார் என்பதே இப் புதினத்தின் பலம்.முதல் குழந்தையின் மீது உணரும் குருதி வாடை இந்நாவல் மீது படிந்துள்ளது.
நாவல் என்பதை மரபார்ந்த வடிவில் கையாளும் எழுத்தாளர்களுக்கு ஏற்படும் விபத்தாகிய,..நான்கைந்து சிறுகதைகளைக் கோர்த்தல்..என்பதைக் கலைச்செல்வியிடம் காணமுடியவில்லை.ஒவ்வொரு கதைமாந்தர் மீதும் ஒவ்வொரு சிறுகதையை சார்த்தி..ஒன்று சேர்த்து நாவலாக்கிவிடும் மகாபாரதக் காலத்து உத்தி இதில் அறவே இல்லை.இதில் வரும் எல்லாக் கதைமாந்தரும் தனக்கான நிலத்திற்கு தவிப்பவர்களாகவே ஒத்தநீரோடையில் பயணிக்கிறார்கள்.
தன் கணவனைக் கொன்றவன் வெடி வைத்திருப்பது தெரியாமல் போவதைத் தடுக்க நினைக்கும்இடம் பெண்ணின் மன ஓட்டங்களை ப் பதியுமிடத்தில் மட்டும் அல்ல..சிறு வருணிப்பில் கூடத் தனித்து நிற்கிறார்..உதாரணமாக ஆடுமேய்க்கும் ஒருத்தியின் உடையை வர்ணிக்கிறார் இப்படி.நல்ல மிட்டாய் ரோஸில் இருந்த சட்டை துவைக்கத் துவைக்க மிட்டாயை வெளியே துப்பியிருந்த து.
கதைத் களனுக்கான தகவல் தரவுகளை யார்வேண்டுமானாலும் மெனக்கெட்டுத் திரட்டிவிடலாம்..ஆனால் அதைத்தரும் உத்தியில் எழுத்தாளரின் நுண்ணுணர்வு கலைத்துவமாக க கை கூடவேண்டும்..இப்புதினத்தில் சரியான பதம் கிடைத்துள்ளது.கல் உடைக்கும் தொழிலின் மிக நுண்ணிய விவரணைகளும் எந்த இடத்திலும் துருத்தவில்லை.இது நடந்திருக்காவிட்டால் சங்கம்..போன்ற ஏராளமான இடதுசாரி நாவல்களின் வரிசையில்இதுவும் சென்று சேர்ந்திருக்கும்.
படித்து முடித்த ஒருவர்,டெலிபோன் பூத் வைத்த ஒருவர் பற்றியோ,சோடா கலர் விற்ற ஒருவர் பற்றியோ நினைப்பார்...இதுதான் இப்புதினத்தின் வெற்றி..
No comments:
Post a Comment