விதைத்து் கொண்டே இருக்க சொன்னாரே சே..
விதைத்தவன் வீழ்ந்து போனாலும் விதைகள் தன்முனைப்புடனல்லா இருக்கும்.. மரமாக மாறலாம்.. அல்லது வெட்டுப்பட்டு போனால் மண்ணுக்கு உரமாகவும் ஆகி விடலாம். ஆனால் இப்பெரிய மனித திரளை தங்களுக்கேற்ப வடிவமைத்து கொண்டிருக்கும் வல்லதிகாரத்தில் யாரெல்லாம் அடக்கப்படுகிறார்களோ அவர்களெல்லாம் ஒன்றுதானே.. கணியன்பூங்குன்றனார் சொல்வது போல யாவரும் எம்மக்கள்தானே.. அடக்கப்படுபவர்களுக்குள் பிரிவினை ஏது..? அவர்களின் இருப்பிடம் வேறாக இருந்தாலும் யாதும் நம் ஊரல்லவா..?
இனி உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ சிலர் இறந்துக் கொண்டேயிருப்பார்கள்… காரணங்கள் தேவையில்லை.. அல்லது அக்காரணம் உலகறிந்த ஒன்றாக இருக்கும்.
கலைச்செல்வி
05/05/2017 : 01.00 மணி நண்பகல்
No comments:
Post a Comment